Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓயாத சர்ச்சை.. ஹிஜாப் அணிந்த 6 மாணவிகள் சஸ்பெண்ட்! 12 பேர் திருப்பி அனுப்பி வைப்பு! பரபர கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் உப்பினங்கடியில் உள்ள அரசு பியூ கல்லூரியில் தொடர்ந்து ஹிஜாப் அணிந்த மாணவிகள் 6 பேர் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மங்களூரு பல்கலைக்கழகத்தில் 12 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். முன்னதாக மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவ அமைப்பினர் காவிஷால் அணிவதாக கூறிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநிலத்தின் சில இடங்களில் வன்முறைகள் வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தின. ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை முதலில் ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு விசாரித்தது. அதன்பிறகு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. மார்ச் 15ல் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு

உயர்நீதிமன்றம் தீர்ப்பு


தீர்ப்பில், ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசு பிப்ரவரி 5ல் பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்க்கும், ஹிஜாப் அணிய அனுமதி கோரும் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு


இதையடுத்து கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏராளமான மாணவிகள் தேர்வும் எழுதவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான பிரச்சனை தலைத்தூக்க துவங்கி உள்ளது. அதாவது முதலில் ஹிஜாப் பிரச்சனை கடலோர மாவட்டங்களில் ஒன்றான தட்சிண கன்னடா மாவட்டத்தில் தான் மீண்டும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

6 மாணவிகள் சஸ்பெண்ட்

6 மாணவிகள் சஸ்பெண்ட்

அதாவது தட்சிண கன்னடா உப்பினங்கடியில் உள்ள அரசு பியூ கல்லூரியில் 6 மாணவிகள் கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்தனர். நேற்றும் அவர்கள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அப்போது இந்துத்துவ மாணவர்கள் காவி ஆடை அணிந்து வருவோம் என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் ஆலோசனை நடத்தி 6 மாணவிகளையும் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்தது.

12 பேர் திருப்பி அனுப்பி வைப்பு

12 பேர் திருப்பி அனுப்பி வைப்பு

இதேபோல், தட்சின கன்னடா மாவட்டம் மங்களூரு பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் 12 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதுதொடர்பான விபரங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+