பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

77 வருடங்களில் இப்படி நடந்தது இல்லை.. வெறும் 17 டிகிரிதான்.. மே மாதத்தில் பெங்களூர் "ரெக்கார்டு!"

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகரில் 77 ஆண்டுகள் இல்லாத வகையில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. கோடை வெயில் சுட்டெரிக்க வேண்டிய நிலையில் மழையால் வெப்பம் தணிந்தது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பெங்களூரில் ஆண்டுதோறும் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும். இதனால் மக்கள் அதிகமாக சிரமத்தை சந்திப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக நகரில் உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் இருக்கும் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இதனால் கோடைக்காலம் கூடுதல் சூட்டை கிளப்புகிறது. இருப்பினும் அவ்வப்போது கோடை மழை பெய்வது மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

 தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த மழையால் சட்டென்று மாறிய வானிலை - 2 இளைஞர்கள் பலி தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த மழையால் சட்டென்று மாறிய வானிலை - 2 இளைஞர்கள் பலி

பெங்களூரில் மழை

பெங்களூரில் மழை

அந்த வகையில் இந்த ஆண்டு கோடைக்காலமான மே மாதத்தின் துவக்கத்தில் சில நாட்கள் மட்டும் வெயில் அதிகளவில் இருந்தது. அதன்பிறகு அவ்வப்போது ஆங்காங்கே கோடை மழை பெய்ய துவங்கியது. பல இடங்களில் சாரலாகவும், சில இடங்களில் ஆலங்கட்டி மழையாகவும் பெய்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகளவில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கின.

 குறைந்த வெப்பநிலை

குறைந்த வெப்பநிலை

இந்த மழையின் காரணமாக பெங்களூர் நகரில் கோடைக்காலத்தின் இயல்பு வெப்பநிலை குறைந்துள்ளது. குறிப்பாக நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி பெங்களூரில் 17.9 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவானது. இது மிகவும் குறைந்த வெப்பநிலையாகும். இதனால் நேற்றைய தினம் குளுகுளு தினமாக மாறிப்போனது. அதாவது கடந்த 75 ஆண்டுகளில் மே மாதத்தில் இப்படி குறைந்தபட்ச அளவில் வெப்பம் பதிவானது இல்லை.

 77 ஆண்டுகளுக்கு பிறகு

77 ஆண்டுகளுக்கு பிறகு

கடைசியாக 1945ம் ஆண்டு மே 6ம் தேதி பெங்களூரில் 16.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதன்பிறகு மிகக்குறைந்த வெப்பநிலை நேற்று தான் பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு 2013 மே மாதம் 13, 2014 மே 25ம் தேதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 18.9 டிகிரி செல்சியசும், மே 12 அன்று, நகரில் குறைந்தபட்ச வெப்பநிலையான 24.3 டிகிரி செல்சியஸ் மற்றும் மே 20 அன்று, அதிகபட்ச வெப்பநிலை 22.4 டிகிரி செல்சியஸ் ஆகும்.

 அடுத்த 48 மணிநேரம் என்ன?

அடுத்த 48 மணிநேரம் என்ன?

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் காலநிலை பற்றி அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூரில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மட்டும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மே 24 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நகரில் அதிகபட்ச வெப்பமாக 26 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பமாக 20 டிகிரி செல்சியசும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற மாவட்டங்களில் கனமழை

பிற மாவட்டங்களில் கனமழை

மேலும் உடுப்பி, உத்தர கன்னடா, தட்சின கன்னடா உள்ளிட்ட கடலோர கர்நாடக மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களான சிவமொக்கா, தாவணகெரே மற்றும் சிக்கமகளூரிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், ஹாசன் மற்றும் குடகு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதவிர தார்வாட், ஹாவேரி, கதக், கொப்பல் மற்றும் பாகல்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக தட்சிண கன்னடா, குடகு, பெலகாவி மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

English summary
In the month of may in 77 years Bangalore record lowest minimum temperature Bangalore recorded the lowest minimum temperature of 17.9 degrees Celsius yesterday. Now it making one of the coldest days in the month of may in 77 year history
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X