உக்ரைனில் கொல்லப்பட்ட மாணவர் உடலை இன்னும் இந்தியா கொண்டுவரவில்லை! மார்சுவரியில் உள்ளதாக பொம்மை தகவல்
பெங்களூர்: உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவனின் உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு, உக்ரைன் மருத்துவமனை மார்சுவரியில் இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். மளிகை பொருள்களை வாங்குவதற்காக ஒரு கடை வாசலில் நின்றிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூட்டை ரஷ்ய ராணுவம் நடத்தியதாக இந்திய மாணவருடைய நண்பர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து பல இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இந்திய மாணவர்கள் உக்ரைனைவிட்டு வெளியே வரமுடியாமல் அங்கேயே இருக்கிறார்கள்.

நவீன்
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் மருத்துவம் படிக்கும் மாணவர் நவீன் சேகரப்பா. இவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சாலக்கேரி கிராமத்தை சேர்ந்தவர். 20 வயதான நவீன் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் 4 ஆவது ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கிருக்கும் பதுங்கு குழியில் தங்கி வந்தார் நவீன். இந்நிலையில் நேற்று ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திய போது இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொலை
இதுகுறித்து நவீனுடன் ஹாஸ்டலில் தங்கியிருந்த ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நவீன் நேற்று காலை உக்ரைன் நேரப்படி 10.30 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார். மளிகைக் கடை முன்பு வரிசையில் காத்திருந்த போது அங்கிருந்த மக்கள் மீது ரஷ்யா ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அப்போது நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் எங்கிருக்கிறது என தெரியவில்லை. எங்களால் மருத்துவமனைக்கும் சென்று பார்க்க முடியவில்லை என்றார்.

மோடி
இந்திய மாணவர் உக்ரைனில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடாவை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நவீனின் தந்தையை தொடர்பு கொண்டு பேசினார். நவீனின் உடல் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

நவீனின் உடல்
''நவீனின் நண்பர் எங்களுக்கு நவீன் உடல் என சில புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதை நாங்கள் வெளியுறவுத் துறைக்கு அனுப்பி, இதை உறுதி செய்ய சொல்லி இருக்கிறோம். அதேபோல் இந்திய தூதரகத்திடமும், நவீன் உடலை பாதுகாப்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து, மாணவரின் உடலை எடுத்து கொண்டு வருவோம்'' என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
Recommended Video

மார்சுவரி
மாணவர் கொல்லப்பட்டு பல நாட்களாகியும் உடல் இந்தியா கொண்டுவரப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், நவீன் உடல் இந்தியா கொண்டுவரப்படுவது குறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில், ''நவீனின் உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு, உக்ரைன் மருத்துவமனையின் மார்சுவரியில் இருக்கிறது. அங்கு தாக்குதல் நிறுத்தப்பட்டதும், மாணவரின் உடல் இந்தியா கொண்டுவரப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்'' என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications