இதுதான் பிளான்.. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து.. சட்டென கார்டை தூக்கிய சிஎஸ்கே.. நடந்தது என்ன?
பெங்களூர்: 2022 ஐபிஎல் ஏலத்தில் எப்போதும் போல இந்த முறையும் சிஎஸ்கே மௌனம் காத்து வருகிறது. பல்வேறு திட்டங்களை போட்டு சிஎஸ்கே அமைதியாக இருப்பதாக தெரிகிறது.
2022 ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மார்க்கி வீரர்களின் ஏலம் முடிந்துள்ளது. பல வீரர்கள் இந்த ஏலத்தில் இதுவரை அணிகள் மாறி உள்ளனர்.
தவான் பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். அஸ்வின் ராஜஸ்தான் அணிக்கு சென்றுள்ளார். வார்னர் டெல்லி அணிக்கு சென்றுள்ளார்.

சிஎஸ்கே
சிஎஸ்கே அணி இந்த ஏலத்தில் தொடக்கத்தில் அமைதியாக இருந்தது. பொதுவாக ஐபிஎல் ஏலங்களில் சிஎஸ்கே அமைதியாக இருப்பதே வழக்கம். அதேபோல் இன்றும் சிஎஸ்கே தொடக்கத்தில் அமைதி காத்தது. அஸ்வின் ஏலம் விடப்பட்ட போது அவரை எடுக்க கூட சிஎஸ்கே விரும்பவில்லை. அதேபோல் சிஎஸ்கே அணி ஷ்ரேயாஸ் ஐயர், தவான் ஆகியோரையும் ஏலம் எடுக்க முயலவில்லை.

சிஎஸ்கே பவுலிங்
பாஸ்ட் பவுலரான பாட் கும்மின்ஸையும் சிஎஸ்கே ஏலம் எடுக்க முயற்சிக்கவில்லை. சிஎஸ்கே அமைதியாக இருந்தாலும் முறையான திட்டத்துடன் வந்துள்ளது. ஒரு வெளிநாட்டு ஓப்பனர், ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டர் ஆகியோரை எடுக்க மட்டுமே சிஎஸ்கே முயன்றது. மார்க்கி வீரர்களில் ஸ்பின் ஆல் ரவுண்டர் இல்லாததால் சிஎஸ்கே அமைதி காத்தது.

ஓப்பனர்
அதன்பின் வெளிநாட்டு ஓப்பனிங் வீரர்கள் வந்ததும் சிஎஸ்கே ஆர்வம் காட்ட தொடங்கியது. டு பிளசிஸ் வரும் வரை அமைதி காத்த சிஎஸ்கே, அதன்பின்தான் சட்டென கார்டை தூக்கியது. ஆனால் அவரை 4 கோடிக்கு மேல் எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்யவில்லை. இதனால் அவர் பெங்களூருக்கு 7 கோடி ரூபாய்க்கு சென்றது. அதன்பின்பு டி காக்கை எடுக்க சிஎஸ்கே முயன்றது.

கடும் போட்டி
ஆனால் அவருக்கு போட்டி நிலவியது. இதனால் டி காக்யும் சிஎஸ்கே எடுக்க முடியவில்லை. கடைசியில் லக்னோ அணி டி காக்கை 6.75 கோடிக்கு எடுத்தது. அதன்பின் இன்னொரு வெளிநாட்டு ஒப்பனரான வார்னரை எடுக்க முயன்றது. ஆனால் அவரையும் 4 கோடிக்கு மேல் கொடுத்து எடுக்க சிஎஸ்கே முயலவில்லை. கடைசியில் வார்னர் 6.25 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் எடுக்கப்பட்டார்.
Recommended Video

ஏலம்
சிஎஸ்கே ஒரு வெளிநாட்டு ஓப்பனிங் வீரரை எடுக்கும் திட்டத்தில் உள்ளது. அதற்காகவே போராடி வருகிறது. அதிகபட்சம் 5 கோடி வரை கொடுத்து சிஎஸ்கே ஒரு வெளிநாட்டு ஓப்பனரை இதில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனியும் மூத்த வெளிநாட்டு வீரர்கள் அல்லது இஷான் கிஷன் போன்ற இளம் ஓப்பனிங் வீரர்களை சிஎஸ்கே எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications