கையில் பாம்பு.. ‛சீன்’ போட்டு சிக்கிய ஜக்கி வாசுதேவ்.. கர்நாடகா வனத்துறை தீவிர விசாரணை.. என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் வன பாதுகாப்பு சட்டத்தை மீறி பாம்பு ஒன்றை தனது நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாக ஈஷா யோகா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது வனத்துறை அதிகாரிகளிடம் பரபரப்பான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்ட இந்த மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதி யோகி சிலை உள்ளது.
இந்த பிரமாண்டமான ஆதியோகி சிலையை பிரதமர் மோடி கடந்த 2017 ம் ஆண்டில் மகாசிவராத்திரியில் திறந்து வைத்தார். அதன்பிறகு ஆண்டுதோறும் மகாசிவராத்திரி தினத்தில் ஈஷா யோகா மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் ஜக்கி வாசுதேவ்
தற்போது கோவை ஈஷா மையம் சுற்றுலா தளமாக மாறி உள்ளது. தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க ஈஷா யோகா அறக்கட்டளையின் ஜக்கி வாசுதேவ் இந்தியா உள்பட வெளிநாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 9 ம் தேதி கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

பாம்புடன் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ்
அங்கு நாகபூஜை விழா நடந்தது. இதில் ஜக்கி வாசுதேவ் பங்கேற்றார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பாம்பு ஒன்றை பயன்படுத்தினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது வன உயிரி பாதுகாப்பு சட்டத்தை மீறி ஜக்கி வாசுதேவ் பாம்பை தனது சுயலாபத்துக்காக நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

வனத்துறையில் புகார்
இதுதொடர்பாக எஸ்பிசிஏ எனும் வனவிலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கத்தை சேர்ந்த பிரித்வி ராஜ் என்பவர் சிக்பள்ளாப்பூர் மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். அதில், ‛‛ஜக்கி வாசுதேவ் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை மீறி சட்டவிரோதமாக சாரை பாம்பை பிடித்து வந்து நிகழ்ச்சியில் பயன்படுத்தி உள்ளார். அவர் பயன்படுத்திய பாம்பு என்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அட்டவணை-2ன் கீழ் பாதுகாப்பட்டு வரும் உயிரினமாகும்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பாம்பு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. இது விதிமீறலாகும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்''என கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி புகார்தாரர் பிரித்விராஜ் கூறுகையில், ‛‛பொது இடத்தில் பாம்புகளை இதுபோல் காட்டுவது என்பது 1972ம் ஆண்டு வனஉயிரி பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றம். இருப்பினும் அவர் பூஜையின்போது சாரைப் பாம்பை காட்சிப் பொருள் போலக் காட்டிக் கொண்டிருந்தார். இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது. அதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளோம்'' என்றார்.

விசாரணையை துவங்கிய வனத்துறை
இந்த புகாரை தொடர்ந்து சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணையை துவங்கி உள்ளனர். இதில் விதிமீறல் இருந்தால் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. ஜக்கி வாசுதேவ் இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும், வனத்தை அழித்து கோவையில் ஈஷா யோகா மையம் கட்டியதாகவும் பலர் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது அவர் பாம்பு பயன்படுத்தி புதிய சிக்கலில் சிக்கி உள்ளார்.

பாதுகாப்புக்காக பிடிக்கப்பட்டது
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛நாக பூஜையின்போது அங்கு நுழைந்த பாம்பு பாதுகாப்பு கருதி பிடிக்கப்பட்டது. தவறான நோக்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு துன்புறுத்தப்படவில்லை. காயப்படுத்தப்படவில்லை. ஜக்கி வாசுதேவ் பாம்மை மென்மையான முறையில் கையாண்டார். அதன்பிறகு பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது'' என கூறப்பட்டுள்ளது.

சர்ச்சை முதல் முறையல்ல
ஜக்கி வாசுதேவ் பாம்பை வைத்து கொண்டு சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல்வேறு வகைகளில் நடந்துள்ளது. பாம்பை வைத்து கொண்டு வீடியோ வெளியிட்டது. பாம்பை பைக்கில் வைத்து கொண்டு பயணித்தது உள்ளிட்ட படங்கள் வெளியாகி விவாதத்துக்கு உள்ளானது. தற்போது சிக்பள்ளாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாம்பை கையில் வைத்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications