பிஎப்ஐ அமைப்பினர் 1,700 மீதான வழக்குகளை ரத்து செய்த கட்சி காங்கிரஸ் - அமித் ஷா விமர்சனம்
பெங்களூர்: "இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்ட 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' (பிஎப்ஐ) அமைப்பைச் சேர்ந்த 1,700 பேர் மீதான வழக்குகளை போகிற போக்கில் ரத்து செய்த கட்சி காங்கிரஸ்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அமித் ஷா இவ்வாறு பேசினார்.
வாக்கு அரசியலுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் காங்கிரஸ் செல்லும் என்பதற்கு, இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும் எனவும் அமித் ஷா கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஜக பொதுக்கூட்டம்
பாஜக ஆட்சி நடந்து வரும் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.இதையொட்டி, பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.குறிப்பாக, பாஜக ஒவ்வொரு மாவட்டமாக சென்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடதொடங்கியுள்ளன. அந்த வகையில், கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா நேற்று கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:

"யாருக்கும் பயப்பட மாட்டோம்"
இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் உண்மையான அக்கறைக் கொண்ட கட்சிபாஜக. நாட்டின் பாதுகாப்பில் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜக சமரசம் செய்துகொள்ளாது. நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டதே இதற்குஉதாரணம். நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்வகையில் அந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. மேலும், பல பயங்கரவாதஅமைப்புகளுடனும் அந்த அமைப்பினருக்கு தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.அதனால்தான், பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய பாஜக அரசு தடைவிதித்தது.பிஎப்ஐ-க்கு தடைவிதித்தால் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர்கூறினார். ஆனால், எதற்கும் பயப்படாமல் அந்த அமைப்புக்கு தடைவிதிக்கும்முடிவை நாங்கள் எடுத்தோம்.

"வழக்குகளை ரத்து செய்தது காங்கிரஸ்"
பாஜக அரசின் நடவடிக்கை இது என்றால், காங்கிரஸ் நடவடிக்கை எப்படி இருந்தது தெரியுமா? கர்நாடகாவில் பிஎப்ஐ அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் மீது ஏராளமானவழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் யாவும், நாட்டின் பாதுகாப்புக்குஎதிரானவை ஆகும். ஆனால், அப்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையிலானகாங்கிரஸ் ஆட்சியில், பிஎப்ஐ அமைப்பினர் 1,700 பேர் மீதான வழக்குகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸின் இந்த செயலுக்கு பின்னால் வாக்குவங்கி அரசியலை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

"சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை"
பாஜகவோ இதுபோன்ற வாக்கு வங்கி அரசியலை நடத்தாது. எந்த சமூகத்தையும்,மதத்தினரையும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடாது. அனைவருக்குமானவளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் கட்சிபாஜக. நாட்டின் பாதுகாப்பிலும், இறையாண்மையிலும் ஒரு சிறிய சமரசத்தை கூடபாஜக செய்து கொள்ளாது. கர்நாடகாவின் பாதுகாப்பை பாஜகவை தவிர வேறு எந்தக்கட்சியாலும் உறுதி செய்ய முடியாது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications