கர்நாடகா அடுத்த முதல்வர் யார்? மக்கள் சொன்ன பதில்.. வெளியான சர்வே முடிவு.. ஓங்கும் கை..வாடும் தாமரை
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்வது தொடர்பான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்பது தொடர்பான சர்வேயில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருக்கு தான் அதிகம் ஓட்டு கிடைத்துள்ளது. பாஜகவை சேர்ந்தவர்கள் பின்தங்கியுள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார்.
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடகா மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல்
இதற்கான தேர்தல் பணியை தற்போதே கட்சிகள் தொடங்கி உள்ளன. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் ஆளும் பாஜக செயல்பட்டு வரும் நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. இதேபோல் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் முனைப்பில் ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால் நான்குமுனை போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான சர்வே முடிவு
இந்நிலையில் தான் South Pulse People Survey முடிவுகள் வெளியாகி உள்ளன. சவுத் பர்ஸ்ட் எனும் செய்தி இணையதளம் சார்பில் Peoples Pules மற்றும் Cicero அமைப்புகள் இணைந்து கர்நாடகா தேர்தல் தொடர்பா சர்வே எடுத்துள்ளன. இந்த சர்வேயில் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பதிலளித்த நிலையில் அதுதொடர்பான முடிவுகள் வெளியாகி உள்ளன.

சித்தராமையாவுக்கு ஆதரவு
அதன்படி, கர்நாடகாவின் முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தாராமையா வர வேண்டும் என 28 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா கடந்த 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் மக்கள் பாஜக ஆட்சியை விரும்பவில்லை என சர்வே தெரிவித்துள்ளது.

2வது இடத்தில் பசவராஜ் பொம்மை
இதற்கு அடுத்தபடியாக தற்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மையை 19 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர். அதன்பிறகு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் முதல்வரான குமாரசாமியை 18 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ள நிலையில், சமீபத்தில் முதல்வர் பதவியை இழந்த பாஜகவின் எடியூரப்பாவுக்கு ஆதரவாக 11 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையாவுடன் முதல்வர் போட்டியில் உள்ள கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு வெறும் 5 சதவீதம் பேர் மட்டும் முதல்வராக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு
முன்னதாக இந்த சர்வே முடிவானது நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவித்து இருந்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கூறியிருந்தது. அதன்படி காங்கிரஸ் கட்சி 101 இடங்களிலும், பாஜக 91 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 29 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்து இருந்தது. இப்படி தொங்கு சட்டசபை உருவானால் ஜனதாதளம் (எஸ்) கட்சி கிங்மேக்கராக மாறும் கூ சர்வே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு தொங்கு சட்டசபை உருவானால் காங்கிரஸ் - ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என 41 சதவீதம் பேரும், பாஜக-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என 38 சதவீதம் பேரும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications