கர்நாடகாவில் இருமதத்தினர் இடையே மோதல்.. மூவருக்கு கத்திக்குத்து.. கடைகளுக்கு தீவைப்பு.. பதற்றம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையான நிலையில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே கெரூர் கிராமம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிலையத்தில் பெண் ஒருவரை சிலர் கிண்டல் செய்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை சிலர் கண்டித்தனர். இருதரப்பினரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடித்து கொண்டனர்.

வன்முறையான மோதல்
அதாவது அருண் கட்டிமணி மற்றும் யாசின் பென்டாரி ஆகியோருக்கு ஆதரவாக ஏராளமானவர்கள் திரண்டனர். அப்போது யாசின் பென்டாரி, இந்து பெண்ணை கிண்டல் செய்ததாக அருண் கட்டிமணி தரப்பு குற்றம்சாட்டியது. அதேநேரத்தில் தன்மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக யாசின் பென்டாரி தரப்பு அருண்கட்டிமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து மார்க்கெட்டுக்குள் நுழைந்து கடைகளை சூறையாடப்பட்டது. மேலும் கடைகள் மற்றும் டூவீலர்கள், பழம்-காய்கறி வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிகளுக்கு தீவைத்தனர். இதனால் மோதல் வன்முறையானது.

கல்வீச்சு-விரைந்த போலீஸ்
மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். கத்திக்குத்து சம்பவங்களும் நடந்தது. இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஓடிவிட்டனர். போலீசார் கடைகள், வாகனங்களுக்கு வைத்த தீயை அணைத்தனர்.

4 பேர் காயம்-18 பேர் கைது
இந்த வன்முறையில் 4 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு
மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் நாளைகாலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதோடு கெரூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications