ஆகஸ்ட் 13 கர்நாடகா பந்த் ரத்து? வாட்டாள் நாகராஜ்க்கு பணியாத அமைப்புகள்! ஆதரவு அடுத்தடுத்து வாபஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவில் ஆகஸ்ட் 13 (நாளை மறுநாள்) பந்த் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்தார். இந்த பந்த் நடப்பது தற்போது சந்தேகமாகி உள்ளது. முதலில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த பல அமைப்புகள் தற்போது அதனை அடுத்தடுத்து வாபஸ் பெற்றுள்ள நிலையில் திட்டமிட்டப்படி பந்த் நடப்பது சந்தேகமாகி உள்ளது.

karnataka-bandh-on-august-13th-doubt-due-to-many-pro-kannada-association-a-withdrawn-their-support-t

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தினமும் காவிரி நதியில் 15 நாட்களுக்கு தலா 3,500 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் என்று கடந்த மாதம் 29ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த சமயத்தில் கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது.

வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் காவிரியில் தண்ணீர் கேட்பது, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடகாவில் ஆகஸ்ட் 13ம் தேதி முழு அடைப்பு (பந்த்) நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்தார்.

ஆனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் தமிழகத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை திறந்து விடப்பட்டது. தற்போது கர்நாடகா அணைகளில் தண்ணீர் அதிகளவில் உள்ளதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சனை இல்லை. இதனால் அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் கோரிக்கை வைத்தார். ஆனால் வாட்டாள் நாகராஜ் பின்வாங்கவில்லை.

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு முன்னோட்டமாக நேற்றைய தினம் கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு போராட்டத்தை நடத்தி கைதானார். இதனால் தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 13) திட்டமிட்டப்படி கர்நாடகாவில் பந்த் நடத்தப்படுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் அணைகளில் தண்ணீர் இல்லாத சமயத்தில் இந்த ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடகா பந்த் அறிவிக்கப்பட்டது. இதனால் முதலில் பல்வேறு கன்னட அமைப்பினர், போக்குவரத்து துறையினர், தனியார் கல்லூரி, பள்ளி சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தற்போது இந்த பந்த் போராட்டத்தில் இருந்து பல அமைப்புகள் பின்வாங்கி உள்ளன. முதலில் கொடுக்கப்பட்ட ஆதரவை திரும்ப பெற்றுள்ளன. கனமழையால் கர்நாடகா அணைகளில் தண்ணீர் அதிகளவில் உள்ளதால் அவர்கள் பந்த் போராட்டத்துக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன.

அதன்படி தனியார் பள்ளிகள் சங்கங்கங்கள், கன்னட திரைப்பட வர்த்தக சபை, ஹோட்டல் சங்கங்கள், கன்னட ரக்‌ஷன வேதிகே (கேஆர்வி) பிரவீன் ஷெட்டி, சிவராமேகவுடா பிரிவு, தனியார் போக்கவரத்து கூட்டமைப்பினர் உள்பட பல அமைப்புகள் ஆகஸ்ட் 13ம் தேதி நடத்தப்படும் பந்த் போராட்டத்துக்கான ஆதரவை திரும்ப பெற்றுள்ளன.

அதேபோல் கர்நாடகா அரசு சாலை போக்குவரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி) பஸ்கள், பெங்களூர் மாநகர அரசு போக்குவரத்து கழகம் (பிஎம்டிசி) பஸ்கள், மெட்ரோ ரயில்கள், தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் திட்டமிட்டப்படி கர்நாடகாவில் பந்த் போராட்டம் முழுமையாக நடப்பது சந்தேகம். இதுபற்றி ஆதரவை வாபஸ் வாங்கியவர்கள் கூறுகையில், ''தற்போது கர்நாடகா அணைகள் முழுமையாக நிரம்பி உள்ளன. இதனால் பந்த் நடத்துவதற்கான தேவை இல்லை. அதேவேளையில் எதிர்காலத்தில் குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு தமிழகம் காவிரி நீர் கேட்கும்பட்சத்தில் தேவை என்றால் பந்த் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவோம்'' என்று கூறியுள்ளனர். இதனால் ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடகாவில் பந்த் போராட்டம் திட்டமிட்டப்படி நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வாட்டாள் நாகராஜ் அறிவித்தபடி பந்த் போராட்டம் நடத்தினாலும் அது மக்களை எந்த விதத்தில் பாதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+