ஆடிப்போன மாப்பிள்ளை.. தாலி கட்டும் போது கல்யாணத்திற்கு 'நோ' சொன்ன மணப்பெண்.. எதுக்காக தெரியுமா?
பெங்களூர்: தாலி கட்ட போகும் நேரத்தில் திருமணம் செய்து கொள்ள மணப்பெண் மறுப்பு தெரிவிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. என்ன நடந்தது, எங்கு நடந்தது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் சிக்கலயாகடரே என்ற கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் திப்பரெட்டி ஹள்ளியை சேர்ந்த யமுனா என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார்களும் பேசி முடிவெடுத்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. அதன்படி, டிசம்பர் 7 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள வைரவேஷ்வர் கோவில் திருமண மண்டபத்தில் திருமணம் வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

கல்யாண ஏற்பாடுகளை இரு வீட்டினரும் தடல்புடலாக செய்து வந்தனர். உற்றார் உறவினர்களுக்கு பத்திரிக்கை வைப்பது.. கல்யாணத்திற்கு வரும் உறவினர்களுக்கு விருந்து வைத்து உபசரிப்பது உள்ளிட்ட வேலைகளுக்காக அட்வான்ஸ் கொடுப்பது என மும்முரமாக கல்யாண வீட்டினர் ஈடுபட்டு இருந்தனர். கல்யாண வீடு களை கட்ட தொடங்கியது. கடந்த 7 ஆம் தேதி மணமக்கள் வீட்டினர் வைரேஷ்வர் கல்யாண மண்டபத்திற்கு வருகை தந்தனர்.
கல்யாணம் வேண்டாம்: முகூர்த்த நேரம் நெருங்கியதால் மணமகன் தாலி கட்ட தயாரானார். வேத மந்திரங்கள் முழங்க மணப்பெண் கழுத்தில் தாலியை கட்ட மணமகன் ஆயத்தமானார். அப்போது திடீரென மணமகள் தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று தடுத்தார். இதைக் கேட்டு மணமகன் ஒரு நொடி அதிர்ந்து போனார். மணப்பெண் வீட்டினரும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழம்பிபோகினர்.
மணமகளிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமாதானம் பேசினர். ஆனால், விடாப்பிடியாக இருந்த மணமகளோ தான் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றும் இதனால், தன்னால் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார். ஆனால், மணமகன் அதிர்ச்சி அடைந்தார்.
மேல்படிப்பு படிக்க ஆசை: மணப்பெண் கல்யாணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்ததாகவும் ஆனால், திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பாக அங்குள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டம் படிக்க மணப்பெண்ணிற்கு சீட் கிடைத்து இருக்கிறது. இதனால், தான் மேல்படிப்பு படிக்க விரும்புகிறேன் என்ற விருப்பத்தை பெற்றோரிடம் மணமகள் தெரிவித்து இருக்கிறார்.
எனினும் இதை ஏற்க மறுத்த மணமகள் வீட்டினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளனர். இருந்தபோதிலும் வைராக்கியமாக இருந்த மணப்பெண்ணோ.. படிப்புதான் முக்கியம் எனக் கருதி மணமேடையில் எதிர்ப்பு தெரிவித்து விட்டார். மணமகள் தாலி கட்டும் கடைசி நேரத்தில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications