எம்ஜிஆர் பாணியில் விஜய்.. காவிரி பிரச்சனையில் புதிய அணுகுமுறை! ஓகே சொன்ன டி.கே.சிவகுமார்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி நீர் பங்கீடு விஷயம் குறித்து பேச.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்திக்க இருக்கிறார் முதலமைச்சர் விஜய். இந்நிலையில் விஜய்யை சந்திக்க ரெடி என்று சிவகுமார் கூறியிருப்பது, பேச்சுவார்த்தை குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

காவிரியின் குறுக்கே ஹேமாவதி, கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேரங்கி என 4 அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில், தற்போது புதியதாக மற்றொரு அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

vijay Karnataka tamil nadu

மறுபுறம், தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய நீர் இன்னும் வரவில்லை. இதனால் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படவில்லை. இது டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இப்படியே போனால் விவசாயிகள் இன்னும் பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே, கர்நாடகா உரிய நீரை உடனே திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் மூலம் தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்தியுள்ளது.

இந்த பின்னணியில்தான், ஆக.3ம் தேதி கர்நாடாகாவில் மேகதாது அணை தொடர்பாக நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் விஜய் நேரில் பங்கேற்கிறார். அங்கு கர்நாடக முதல்வரை சந்தித்து பேச இருக்கிறார். கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இப்படி கர்நாடக முதல்வர்களை சந்தித்தது கிடையாது. ஆனால், எம்ஜிஆர் முதல்வராக இருந்த நேரத்தில், கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவை சந்தித்து நதிநீர் விவகாரம் குறித்து பேசியிருந்தார்.

தற்போது அதே பாணியை முதல்வர் விஜய் கையில் எடுத்திருக்கிறார். இந்த சந்திப்புக்கு கர்நாடக தரப்பிலிருந்தும் பாசிட்டிவ் சிக்னல் வந்திருக்கிறது. "நாங்கள் அனைவருடன் பேசி, இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். பக்கத்து மாநிலங்களுடன் சுமூகமான உறவை மெயின்டெயின் செய்யவே விரும்புகிறோம். அதிலும் குறிப்பாக காவிரி நீர், மேகதாது அணை தொடர்பாக தமிழகத்துடன் பேச நான் ரெடி" என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகாவின் 4 அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 177 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 14 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்திருக்கிறது. மீதமுள்ள தண்ணீரை தமிழகம் தொடர்ந்து கேட்டு வருகிறது. ஆனால், அணைகளில் போதுமான இருப்பு இல்லை என்றும், பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், தண்ணீரை கொடுக்க முடியாது என்றும் கர்நாடகம் கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+