பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேகதாதுவில் அணை கட்ட கோரி காங். பாதயாத்திரை.. கொரோனா பரவலால் தற்காலிகமாக ரத்து !

Google Oneindia Tamil News

பெங்களூர்: மேகதாதுவில் அணை கட்ட கோரி காங்கிரஸ் கட்சி நடத்தி வந்த பாதயாத்திரை திட்டம் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு கர்நாடக அரசு அனுப்பி வைத்தது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

 Karnataka Congress temporarily suspends Mekedatu foot march

இந்நிலையில், மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் கடந்த 9-ம் தேதி முதல் பாதயாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொரோனா பரவும் சூழ்நிலையில் இந்த பாதயாத்திரையை தடுக்க அரசு ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என கர்நாடக அரசுக்கு கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக 14-ம் தேதி கர்நாடக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி தொடங்கிய பாதயாத்திரைக்கு கர்நாடகா அரசு அதிரடி தடை விதித்தது. மேலும் தடையை மீறி பாதயாத்திரை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பாதயாத்திரை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பாதயாத்திரை திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து எதிரக்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதயாத்திரையை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். மூன்றாவது அலை முடிந்தவுடன் ராம்நகரிலிருந்து பாதயாத்திரை தொடங்குவோம் என்றார்.

3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka Congress temporarily suspends Mekedatu foot march amid surge in corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X