"ஏய் இதெல்லாம் போடாதீங்க".. சைக்கிள் ஓட்டி கீழே விழுந்த டிகே சிவக்குமார்.. வெளியான வீடியோ
பெங்களூர்: பெங்களூர் விதான சவுதாவுக்கு சைக்கிளில் சென்ற கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பெங்களூரில் இன்று கர்நாடகா அரசு சார்பில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியை கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் தொடங்கி வைத்தார்.
இதற்காக அவர் விதான சவுதா வளாகத்துக்கு சைக்கிளில் சென்றார். கருப்பு நிற டீசர்ட், கருப்பு நிற பேண்ட், கருப்பு நிற கண்ணாடி அணிந்து, கழுத்தில் வெள்ளை நிற சால்வையுடன் டிகே சிவக்குமார் சைக்கிள் ஓட்டினார். விதான சவுதா காரிடாருக்கு அவர் சைக்கிளில் செல்ல மற்றவர்கள் அவரை பின்தொடர்ந்து சைக்கிளில் சென்றனர்.
விதான சவுதா படிக்கட்டின் அருகே டிகே சிவக்குமார் சைக்கிளை நிறுத்தி இறங்க முயன்றார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறினார். மேலும் அடுத்த நொடியே அவர் வைத்திருந்த சைக்கிள் முன்நோக்கி நகர டிகே சிவக்குமார் பொத்தென விதான சவுதா படிக்கட்டில் விழுந்தார். இதனை அங்கிருந்த பத்திரிகையாளர்களின் கேமராக்களில் பதிவு செய்தனர்.
இதனை பார்த்த டிகே சிவக்குமார் உடனடியாக, ‛‛ஏய்.. இதெல்லாம் காண்பிக்காதீங்க..'' என்று சிரித்தபடி கூறினார். இதற்கிடையே தான் டிகே சிவக்குமார் விதான சவுதா படிக்கட்டில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications