அது பாம்பு இல்லை.. எனது புருஷன்! நாகப்பாம்புடன் 4 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி! அதிர்ந்த கர்நாடக கிராமம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மூதாட்டி ஒருவர், பாம்புடன் குடும்பம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் இருக்கும் அனைத்தும் நாடுகளிலும் கண்டறியப்படும் உயிரினமாகப் பாம்புகள் உள்ளன. தென் துருவ கண்டனமான அண்டார்டிக்கா தவிர உலகின் அனைத்து கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன.
வெறும் 10 செமி நீளமுடைய சிறிய பாம்பு தொடங்கி முதல் மிகவும் நீளமான மலைப்பாம்புகள், அதீத விஷம் கொண்ட நாகப்பாம்புகள் என உலகெங்கும் உலகெங்கும் சுமார் 4000க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்டறியப்படுகிறது.

பாம்பு
இதுபோன்ற பாம்புகள் இந்தோ-பசிபிக் நாடுகளில் தான் அதிகம் காணப்படும். அதிலும் இந்தியாவில் அதிக வகையிலான பாம்புகள் இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாம்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது கணவரின் மறுபிறவி என நினைத்து, அந்த பாம்புடன் ஒரே வீட்டில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மூதாட்டி
கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள குல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதா மோனேஷா கம்பரா. இவர் பல ஆண்டுகளாகவே அந்த கிராமத்தில் தான் வசித்து வருகிறார். இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் மோனேஷா வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

பாம்பு
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மோனேஷாவின் வீட்டில் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் நாகப்பாம்பைப் பார்த்து மோனேஷா சிறிதும் பதறவில்லை. மாறாக, பாம்பு வடிவில் வந்திருப்பது தனது கணவர் என்றும், அதற்கு யாரும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் அக்கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

மறுபிறவி
சுமார் 4 நாட்களுக்கு அப்பெண் நாகப்பாம்பைத் தனது கணவரின் மறுபிறவி என்று நினைத்து, அதனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அக்கிராம மக்கள் மோனேஷாவிடம் பெரும் சிரமப்பட்டு ஆபத்தை விளக்கி உள்ளனர். அதன் பின்னரே பாம்பைத் தனது வீட்டிலிருந்து கிராம மக்கள் எடுத்துச் செல்ல மோனேஷா ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நச்சுப்பாம்பு
நமது நாட்டில் மட்டும் சுமார் 270க்கும் மேற்பட்ட வகை பாம்புகள் உள்ளன. இதில் மிகவும் ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகளை ஆய்வாளர்கள் Big Four என்று அழைக்கிறார்கள். இந்திய நாகம், கட்டு விரியன், சுருட்டைப் பாம்பு, கண்ணாடி விரியன் ஆகியவற்றைத் தான் ஆய்வாளர்கள் Big Four என்று அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆபத்தான பாம்பு வகைகளில் ஒன்றான நாகப்பாம்பு உடன் தான் அந்த மூதாட்டி 4 நாட்கள் இருந்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications