காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில்.. விக்கி விக்கி அழுத டிகே சிவகுமார்.. பிரஸ் மீட்டில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் திடீரென பத்திரிகையாளர்கள் சூழ்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டபோது தன்னை அறியாமல் டிகே சிவக்குமார் ரொம்ப எமோஷனலாக ஆனந்த கண்ணீர் சிந்தியது கட்சியினரை நெகிழ செய்தது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தொங்கு சட்டசபை உருவாகும் என பல கருத்து கணிப்புகள் கூறிய நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்து வந்த நிலையில் கர்நாடகாவை பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
குறிப்பாக முதல்வர் பதவி மீது குறிவைத்துள்ள சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநில தலைவர் என்ற முறையில் டிகே சிவக்குமாரும் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலம் முழுவதும் சூறாவளியாக பிரசாரம் செய்தார்.
இந்த பிரசாரத்துக்கு பயனாக தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிவு வெளியான நிலையில் டிகே சிவக்குமார் தனது வீட்டில் சகோதரரும் எம்பியுமான டிகே சுரேஷ் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து டிவியில் தேர்தல் ரிசல்டை பார்த்து கொண்டிருந்தார்.
ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்ததால் அவர்கள் உற்சாகமடைந்தனர். இறுதியில் காங்கிரஸ் கட்சி 130 தொகுதிகளில் முன்னிலை பெற்ற நிலையில் டிகே சிவக்குமாரை பார்க்க அவரது வீட்டுக்கு முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
#WATCH | Karnataka Congress President DK Shivakumar gets emotional on his party's comfortable victory in state Assembly elections pic.twitter.com/ANaqVMXgFr
— ANI (@ANI) May 13, 2023
இதையடுத்து டிகே சிவக்குமார் வெளியே புறப்பட்டு வந்து தொண்டர்களை சந்தித்து வெற்றியை கொண்டாடினார். இதன் தொடர்ச்சியாக டிகே சிவக்குமாரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கேள்விகள் கேட்டனர். அப்போது கட்சிக்காக தேர்தலில் உழைத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்த டிகே சிவக்குமார் வெற்றி களிப்பில் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாக வேகமாக பரவி வருகிறது.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications