கர்நாடகாவில் மோசமான நீர் தட்டுப்பாடு.. களமிறங்கும் இயற்கை ஆர்வலர்கள்.. சூப்பர் திட்டம்!

கர்நாடகாவில் நிலவும் மோசமான நீர் தட்டுப்பாட்டையும், வறட்சியையும் போக்குவதற்காக கர்நாடகாவை சேர்ந்த இயற்கை பாதுகாப்பு அமைப்புகள், அம்மாநிலத்தின் காடுகளை பாதுகாக்க முடிவு செய்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் நிலவும் மோசமான நீர் தட்டுப்பாட்டையும், வறட்சியையும் போக்குவதற்காக கர்நாடகாவை சேர்ந்த இயற்கை பாதுகாப்பு அமைப்புகள், அம்மாநிலத்தின் காடுகளை பாதுகாக்க முடிவு செய்து இருக்கிறது.

இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்து மிக மோசமாக வறட்சியை சந்தித்து இருக்கும் மாநிலங்களில் கர்நாடகா இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. கர்நாடகாவில் உள்ள மொத்தம் 176 தாலுக்காக்களில் 156 தாலுக்காக்கள் மிக மோசமான வறட்சியை சந்தித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 20 தாலுக்காக்களில் மட்டுமே வறட்சி ஏற்படவில்லை.

Karnataka: Environmental Groups come together to save the forests of the State

கர்நாடகாவின் நீர் ஆதாரம்:

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலநாடுதான் கர்நாடகாவின் மிக முக்கியமான நீர் ஆதாரங்களாக திகழ்கிறது. சுமார் 65 சிறிய பெரிய நதிகளுக்கு இதுதான் தாயாக உள்ளது. பத்ரா, துங்கா, ஹேமாவதி, நேத்ராவதி, காவேரி, குமரதாரா,கலாசா, பாந்துரில், பீமா ஆகிய நதிகள் இதில் இருந்து உருவாகும் மிக முக்கியமான நதிகள் ஆகும். இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள், பல மாவட்ட மக்கள், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பலன் அடைகிறார்கள். இந்த மலைகளில் இருக்கும் மரங்களை காப்பதே இந்த நதிகளின் உற்பத்தியை தொடர்ந்து நிகழ செய்யும்.

ஆனால் மலநாட்டில் நிலை அப்படி இல்லை. மலநாட்டில் தொடர்ந்து நிறைய மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. தற்போது அங்கு திட்டமிடப்பட்டு இருக்கும் வளர்ச்சி திட்டங்களால் சுமார் 21 லட்சம் மரங்கள் வெட்டப்பட இருக்கிறது. மலநாட்டில் இயற்கை மொத்தமாக அழிவது வெகுதூரத்தில் இல்லை என்கிறார்கள். இதனால் அங்கு உருவாகும் நதியும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை சந்திக்கும் என்கிறார்கள்.

மரம் இல்லை, நீர் இல்லை

மரங்களுக்கும் நீர் ஆதாரங்களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால் சட்டங்களை வகுப்பவர்களால் அதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அரசுகள் திட்டங்களுக்கு மேல் திட்டங்களை கொண்டு வருகிறது. இதனால் நிறைய மக்கள் பலன் பெறுகிறார்கள். அதேசமயம் இதனால் ஆயிரகணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகிறது. மரங்களுக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்புகளை நாம் படத்தில் இருந்தே கொண்டு வர வேண்டும்.

இதற்காக கல்வி திட்டத்திலேயே மாற்றம் கொண்டு வர வேண்டும். மிக மோசமாக திட்டமிடப்படும் திட்டங்களால் கர்நாடகாவில் பல ஆயிரக்கணக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு இருக்கிறது.

Karnataka: Environmental Groups come together to save the forests of the State

வளர்ச்சியும் பாதுகாப்பும்

ஒரு நாட்டின் வளர்ச்சியும், அந்த நாட்டின் இயற்கை வள பாதுகாப்பும் சேர்ந்து நிஜால வேண்டியது. ஆனால் இப்போது அப்படி நிகழ்வதில்லை. கர்நாடகாவில் பல லட்சம் மக்கள் பயன்படுத்தும் நதிகள் இதனால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பல இழப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.

இது தொடர்பாக நாம் பல விவாதங்களை நடத்த வேண்டி இருக்கிறது, முக்கியமாக பெரிய திட்டங்கள்தான் ஒரு நாட்டின் வளர்ச்சியா? சிறிய நிலையான வளர்ச்சியை மக்கள் மறந்துவிட்டோமோ, பெரிய திட்டங்களால் மக்களுக்கு என்ன பயன், பெரிய திட்டங்கள் நிலையானதா? மரங்களை வெட்டிவிட்டு, நதிகளை அழித்துவிட்டு பெரிய திட்டங்களை கொண்டு வந்து என்ன செய்ய போகிறோம்? நிலையான திட்டங்கள் என்றால் என்ன? என்று பல விஷயங்கள் குறித்து இப்போதே மக்கள் விவாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஒருங்கிணைந்த பேணுகை அமைப்பு (United Conservation Movement):

வளர்ச்சி அமைப்புகள், இயற்கை ஆர்வலர்கள் எல்லோரும் ஒன்றாக கூடி இதற்காக அமைப்பை உருவாக்கி கர்நாடகாவின் நீர் நிலைகளை காக்க வேண்டும். இதுதான் United Conservation Movement அமைப்பின் நோக்கம் ஆகும். இது நம்முடைய நதிகளை காக்கும், மரங்களை காக்கும் அதே சமயம் பெரிய திட்டங்கள் நம்முடைய இயற்கை வளங்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

United Conservation Movement மூலம் ஏற்கனவே Save Bandipur என்ற பந்திபூர் நதியை காப்பதற்கான முழக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான பணிகளும் நடந்து வருகிறது. அதேபோல் மாநிலம் முழுக்க ''மரம் இல்லை, நதி இல்லை'' ('No Trees, No Water') என்ற பேரணியும் நடத்தப்பட உள்ளது.

இதில் இயற்கை ஆர்வலர்கள், மக்கள், இளைஞர்கள், வல்லுநர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இயற்கைக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகள் குறித்து இதில் பெரிய அளவில் விவாதங்கள் செய்யப்பட உள்ளது. எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

பின்வரும் இயற்கை ஆர்வல அமைப்புகள், என்ஜிஓக்கள் இந்த ஆலோசனை கூட்டத்தை ஆதரிக்கிறது.

1. தி வைல்டர்நஸ் கிளப் - The Wilderness Club, Bengaluru
2. மத்திய இயற்கை மற்றும் காட்டுவாழ் உயிரிகள் இயக்கம் - Centre for Environment and Wildlife studies, Bengaluru
3. பாரஸ்ட் பஸ்ட் - Forest First, Bengaluru
4. மத்திய இயற்கை படிப்புகள் விழிப்புணர்வு அமைப்பு - Centre for Awareness and Nature Study, Bengaluru
5. நேச்சர் பர்ஸ்ட் ஈகோ வில்லேஜ் - Nature First Eco-Village, Dharwad
6. கூர்க் காட்டுவாழ் அமைப்பு - Coorg Wildlife Society, Kodagu
7. சேவ் கொடகு மற்றும் காவிரி இயக்கம் - Save Kodagu and Cauvery Campaign, Kodagu
8. நீடித்த வாழ்விற்கான ஐக்கியம் அமைப்பு - Aikyam Community for Sustainable Living, Bengaluru
9. குடிநீர் பாதுகாப்பிற்கான கூட்டணி - Coalition for Water Security, Bengaluru
10. சிட்டிசன்ஸ் அஜெண்டா - Citizens Agenda for Bengaluru
11. புலிகளுக்கான கிரிக்கெட்டர்களின் அமைப்பு - Cricketers for Tiger Conservation, Bengaluru
12. ராஷ்டிரிய சுவாபிமான அந்தோலனா - Rashtreeya Swabhimana Andolana, South India
13. கன்சர்வேஷன் அவார்னஸ் டீம் - Conservation Awareness Team Trust, Bengaluru
14. மலநாடு காட்டுவாழ் அமைப்பு - Malenadu Wildlife and Cultural Foundation, Shivamogga
15. சாரா அமைப்பு - SARA Center, Dhombekoppa, Sagara by
16. காட்டுவாழ் அமைப்பு, மைசூரு, Wildlife Conservation Foundation, Mysuru
17. ஈகோ வாட்ச், Eco Watch, Bengaluru
18. இன்டு தி வைல்ட் - Into The Wild, Bengaluru
19. டேலண்ட் கியூஸ்ட் பார் இந்தியா -Talent Quest for India, Tamil Nadu
20. சேவ் ரிவர் காவேரி - Save River Cauvery, Bengaluru
21. மலநாடு ஜனபரா ஹோராட்டா சமிதி - Malenaadu Janapara Horaata Samiti, Hassan
22. இந்தியா கிரீன் அண்ட் வைல்ட் - India Green and Wild, Mumbai
23. இந்தியன் வைல்ட் லைப் மற்றும் நேச்சர் கன்சர்வேஷன் டிரஸ்ட் - Indian Wildlife and Nature Conservation Trust
24. பன்னர்கெட்டா நேச்சர் கன்சர்வேஷன் டிரஸ்ட் - Bannerughatta Nature Conservation Trust ஆகிய நிறுவனங்கள் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+