கர்நாடகா அமைச்சராகும் 8 பேர்! சித்தராமையா ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு! டிகே சிவக்குமாருக்கு ஷாக்
பெங்களூர்: கர்நாடகாவில் புதிய அமைச்சர்களாக இன்று 8 பேர் பதவியேற்க உள்ளனர். இதில் டிகே சிவக்குமாரை விட சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டிகே சிவக்குமார் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 66 இடங்களில் வென்ற நிலையில், ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 இடங்களில் வென்றனர்.

இதையடுத்து கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரையும் காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை பெற காய்நகர்த்திய நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்க மேலிடம் மறுத்துவிட்டது.
இதையடுத்து முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் இன்று பதவியேற்கின்றனர். பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் நடக்கும் விழாவில் இருவரும் பதவியேற்கின்றனர். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்கிறார். மேலும் இவர்கள் 2 பேருடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் பட்டியல் இன்று காலையில் வெளியிடப்பட்டது.
அதில் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இவர்கள் 8 பேரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் தங்களின் ஆதரவு எம்எல்ஏக்களை அமைச்சர்களாக்கவும், அவர்களுக்கு முக்கிய துறைகளை பெற்று கொடுக்கவும் முயன்று வருகின்றனர். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடுத்தக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவவரும் நேற்று டெல்லி சென்றனர். மேலிட தலைவர்கள் முன்னிலையில் அமைச்சரவை அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இருதரப்பினருக்கும் 50:50 என்ற அளவில் அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் இன்று முதற்கட்ட அமைச்சர்கள் இதில் டிகே சிவக்குமாரை விட சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இன்று அமைச்சராகும் எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, ஜமீர் அகமது கான், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டவர்கள் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இதில் ஜமீர் அகமது கான் தவிர மற்றவர்கள் கடந்த 2013-2018 ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது அமைச்சர்களாக செயல்பட்டனர்.
இதுதவிர முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் மல்லிகார்ஜூன கார்கேவின் ஆதரவாளர் ஆவார். அதேபோல் பிரியங்க் கார்கேவும் தனது தந்தை மல்லிகார்ஜூன கார்கேவின் பக்கம் தான் உள்ளார். மாறாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேஎச் முனியப்பா சோனியா காந்தியின் தீவிர விசுவாசி ஆவார். இதன்மூலம் டிகே சிவக்குமாரை விட சித்தராமையாவின் கையே முதற்கட்ட அமைச்சர்கள் பட்டியலில் ஓங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications