மைசூர் சாண்டல் சோப் விளம்பரம்.. தமன்னாவுக்கு ரூ. 6 கோடி.. மொத்தம் ரூ. 56 கோடி செலவு.. கர்நாடகா அரசு
பெங்களூர்: கர்நாடகா அரசு தயாரிக்கும் மைசூர் சாண்டல் சோப் சர்ச்சை இன்னும் ஓயவில்லை. மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் நடிகை தமன்னாவுக்கு ரூ.6.27 கோடி சம்பளம் வழங்கியதுடன், மொத்தம் ரூ.56 கோடி விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது என்று கர்நாடகா அரசு சட்டமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருப்பது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆளும் காங்கிரஸ் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியது சர்ச்சையானது. டிகே சிவக்குமார் ஏற்கனவே பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோருடன் நெருக்கமாக இருப்பதாக விமர்சனம் உள்ளது.

மைசூர் சாண்டல் சோப் சர்ச்சை
அவர் ஆர்எஸ்எஸ் பாடல் பாடிய சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. பிரபலமான மைசூர் சாண்டல் சோப்பை கர்நாடக அரசு நிறுவனமான கர்நாடகா சோப் அண்ட் டிடெர்ஜென்ட் தயாரிக்கிறது. நூற்றாண்டு பெருமைமிக்க இந்த சோப் நிறுவனம் அரசுக்கு நல்ல வருவாய் கொடுக்கிறது. தினசரி 12 லட்சம் மைசூர் சாண்டல் சோப்புகளை கர்நாடகா அரசு தயாரிக்கிறது.
இதன் வர்த்தகத்தை பெரிதாக்குவதற்காக அகில இந்தியளவில் பிரபலமானவர்களை, மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதர்களாக நியமித்து வருகிறார்கள். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக இருந்தார். அந்த வரிசையில் தீபிகா படுகோனே, ராஷ்மிகா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், கடந்த வருடம் நடிகை தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.
தமன்னா விளம்பர தூதர்
இது கர்நாடகா அரசியலில் அப்போதே சர்ச்சையை கிளப்பியது. "கர்நாடகா அரசுக்கு சொந்தமான ஒரு சோப்புக்கு கர்நாடகாவில் இருந்த எந்த நடிகையும் கிடைக்கவில்லையா. எதற்காக வட மாநில நடிகையை விளம்பர தூதராக நியமித்து கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்." என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
அதற்கு கர்நாடகா அரசு, பாலிவுட்டுக்கு போட்டி கொடுக்க வேண்டும். மைசூர் சாண்டல் பிராண்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 3 வருடங்களில் ரூ.5,000 கோடி வர்த்தகம் ஈட்டுவதற்காகவே மார்க்கெட்டிங் நிபுணர்களிடம் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்ததாக கூறியது.
ரூ. 56 கோடி செலவு
இந்நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் பாஜக எம்எல்ஏ சுனில் குமார், "மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்கான செலவு" குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கர்நாடகா அரசு, "நடிகை தமன்னாவுக்கு ரூ.6.27 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்காக ரூ48.88 செலவிடப்பட்டுள்ளது.
மேலும் நடிகை ஐஷானி ஷெட்டிக்கு ரூ.15 லட்சம், சமூகவலைளதங்களில் ரீல்ஸ் விளம்பரத்திற்காக ரூ.62.87 லட்சம் என்று மொத்தம் ரூ.56 கோடிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது." என்று அந்த மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications