பெங்களூரை விட்டு வெளியேறினால் ஐடி ஊழியர்களுக்கு 50000 பணம் தரும் கர்நாடகா அரசு.. முழு விவரம்
பெங்களூர்: பெங்களூர் கடந்த 20 வருடங்களில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் வந்து பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். கோடிகணக்கான பேர் வந்துவிட்டதால் பெங்களூர் திணறுகிறது. இதை சமாளிக்கும் விதமாக கர்நாடகா அரசு, பெங்களூரை விட்டு வெளியேறி, மாநிலத்தின் மற்ற நகரங்களில் தங்கள் நிறுவனத்தை அமைத்தால், அந்த நிறுவன பணியாளர்களுக்கு 50000 பணம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று போற்றப்படும் பெங்களூர், இளம் தொழில் நுட்ப வல்லுநர்களையும், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் ஈர்க்கும் இடமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஏராளமான ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. புதிய ஸ்டார்ட் அப் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகிறது. இதனால் திறமையான ஐடி பணியாளர்களை பெங்களூர் சிவப்பு கம்பளம் வைத்து வரவேற்கிறது. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வந்துள்ளார்கள். இதன் காரணமாக பெங்களூர் நெரிசலில் திணறுகிறது. மறுபக்கம் எந்த வாய்ப்புகளும் இல்லாமல், மைசூர், மங்களூர், கலபுரகி, ஷிவமொக்கா, தாவணகெரே போன்ற கர்நாடகாவின் இரண்டாம் நிலை நகரங்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் திணறுகின்றன.

தமிழ்நாட்டில் நிலைமை வேறு
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையை மட்டுமே நம்பி தமிழ்நாடு கிடையாது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை பெருநகரத்தை தாண்டி, கோவை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தூத்துக்குடி, சிவகாசி, ஓசூர், மதுரை, ராமேஸ்வரம், கடலூர், திண்டுக்கல், கரூர் என பல்வேறு நகரங்கள் தொழில் வளர்ச்சியில் தனித்துவமாக இருக்கின்றன. மக்கள் ஐடி தொழில் மற்றும் ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த வேலைக்கு மட்டுமே சென்னை செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. மற்றபடி மற்ற தொழிலுக்காக சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை.. உள்ளூரிலேயே நல்ல வாழ்க்கை தரமும் இருக்கிறது.
சலுகை அறிவிப்பு
ஆனால் கர்நாடகாவை பொறுத்தவரை தலைநகரான பெங்களூரைசுற்றித்தான் வளர்ச்சியே இருக்கிறது. மற்ற பகுதிகளில் தனித்துவமாக வளர்ச்சி பெரிய அளவில் இல்லை.. எல்லாருமே பெங்களூர் வரவேண்டிய நிலை தான் இருக்கிறது. எனவே தான் கர்நாடகா அரசு பெங்களூருக்கு வெளியே ஐடி நிறுவனங்களை ஆரம்பித்தால் பெரிய அளவில் சலுகை தருவதாக தற்போது அறிவித்துள்ளது.
50000 வழங்கப்படும்
இதற்காக கர்நாடக அரசு 2025-2030க்கான புதிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கொள்கையின் படி, பெங்களூருவில் நிறுவனம் தனது தொழில்நுட்பக் குழுக்களைப் பெங்களூருவிலிருந்து மாநிலத்தின் பிற நகரங்களுக்கு மாற்றினால், ஒவ்வொரு ஊழியருக்கும் தலா ரூ.50,000 வழங்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. பெங்களூருக்கு அப்பால் வேலைவாய்ப்புகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிதி நிபுணர் சார்தக் அஹுஜா தகவல்
இதன்படி, கர்நாடகாவில் பெங்களூர் தவிர, மாநிலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிதாக தொடங்கவோ அல்லது விரிவுபடுத்தவோ தயாராக இருந்தால் விரிவான சலுகைகள் கிடைக்கும். நிதி நிபுணர் சார்தக் அஹுஜா என்பவர், இந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்களை தனது லிங்க்ட்இன் பதிவில் கூறுஐகயில், "பெங்களூரை விட்டு வெளியேற அரசு உங்களுக்குப் பணம் கொடுக்கிறது. உங்கள் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்பை மைசூரு அல்லது மங்களூரு போன்ற இரண்டாம் நிலை நகரத்தில் அமைக்குமாறு கர்நாடக அரசு விரும்புகிறது. இது அனைத்தும் புதிய ஐடி கொள்கையின் ஒரு பகுதி" என்று கூறியுள்ளார்.
கர்நாடாக அரசின் புதிய கொள்கையின் முக்கியச் சலுகைகள் என்னென்ன?
மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி-தாரவாட், பெலகாவி, கலபுரகி, ஷிவமொக்கா, தாவணகெரே மற்றும் துமகூரு போன்ற நகரங்களைத் தேர்ந்தெடுக்கும் ஸ்டார்ட்-அப்களுக்காக பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அஹுஜா சுட்டிக்காட்டியருக்கிறார். அந்த தகவல்களை அப்படியே பார்ப்போம்.
வாடகைச் சலுகை: வாடகையில் 50% திரும்பப் பெறலாம். இது அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கிடைக்கும்.
சொத்து வரிச் சலுகை: சொத்து வரியில் 30% திரும்பப் பெறுதல் (3 ஆண்டுகளுக்கு).
மின்சாரக் கட்டணச் சலுகை: 5 ஆண்டுகளுக்கு மின்சார வரியிலிருந்து 100% முழு விலக்கு.
தகவல் தொடர்புச் சலுகை: தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்களில் 25% விலக்கு. இது அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை கிடைக்கும்.
960 கோடி ஒதுக்கிய கர்நாடகா அரசு
மேலும், கர்நாடகா அரசின் இந்த புதிய கொள்கையின் பெரிய விஷயம் என்னவென்றால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஆதரவி தான் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங், பிளாக்செயின், ஏல், மற்றும் எம்எல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்கள், தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகளில் 40% வரை திரும்பப் பெறலாம் என்றும் இதன் அதிகபட்ச வரம்பு ரூ.50 கோடி என்றும் கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தச் சலுகைகளுக்காக கர்நாடகா அரசு கிட்டத்தட்ட ரூ.960 கோடியை ஒதுக்கியுள்ளது.
டிசம்பரில் தொடங்கலாம்
அதேபோல் இதற்காக கர்நாடகா அரசு முறையான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிட போகிறது. இதற்கு என்று தனியாக, சிஸ்டம் கட்டமைக்கப்பட உள்ளது. அப்படி அமைத்த பின்னர், ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் வெறும் 100 விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்பதால், இது முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கும் என்று அஹுஜா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பணத்தை சேமிக்க ஸ்டார்ட்-அப்கள் பெங்களூரை விட்டு வெளியேறுவதை ஏற்பார்களா
பொதுவாக, ஸ்டார்ட்-அப்கள் ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு வெறும் பணம் மட்டும் காரணமாக இருக்காது. வெற்றிகரமான ஒரு தொழில் சூழல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கண்டிப்பாக வேண்டும். கர்நாடகா அரசின் கொள்கையில் சாதகங்கள் என்னவென்றால், புதிய ஸ்டார்ட்-அப்களுக்கு ரூ.960 கோடி ஒதுக்குவது மிகப்பெரிய ஊக்கத்தொகையாகும். வாடகை, வரி, மின்சாரம் போன்றவற்றில் கிடைக்கும் சலுகைகள், குறிப்பாக ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு, செலவுகளைப் பெருமளவில் குறைக்க உதவும். அடுத்ததாக மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி-தாரவாட், பெலகாவி, கலபுரகி, ஷிவமொக்கா, தாவணகெரே மற்றும் துமகூரு போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் பெங்களூரை விட வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவு குறைவாக இருக்கும். இதனால், ஊழியர்களின் சம்பளச் செலவுகள் குறையலாம். அரசு நேரடியாகப் பணம் கொடுத்து ஊக்குவிப்பது, அந்த நகரங்களில் தங்கள் வணிகத்தை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக இருக்கும்.
ஸ்டார்ட் அப்களுக்கு பாதகமான அம்சங்கள்
பெங்களூர் மாநகரம் இந்தியாவின் ஐடி தலைநகரம்.இங்கு பல லட்சம் திறமையயான ஐடி ஊழியர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள கட்டமைப்புகளும் ஸ்டார்ட் அப்களுக்கு உகந்த சூழலாக இருக்கிறது. ஆனால் பெங்களூருவில் இருப்பது போல, இரண்டாம் நிலை நகரங்களில் உயர்தர தொழில்நுட்பத் திறமையாளர்கள் எளிதாகக் கிடைக்க வாய்ப்பு இல்லை. முன்னணிப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் பெங்களூருவில் தான் இருக்கிறது. வெளியூர் பணியாளர்களும் பெங்களூர் தான் வருகிறார்கள். எனவே அங்கிருந்து ஊழியர்களை அழைத்து பணியாற்ற சொன்னால் ஏற்க மாட்டார்கள்.
வசதிகள் குறைவாக இருக்கும்
அதேபோல் பெங்களூருவை ஒப்பிடும் போது மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி-தாரவாட், பெலகாவி, கலபுரகி, ஷிவமொக்கா, தாவணகெரே மற்றும் துமகூரு போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் போக்குவரத்து, சர்வதேச விமான நிலையம், எல்லாநேரமும் தடையில்லாமல் மின்சாரம் மற்றும் அதிவேக இணையதள வசதிகள் குறைவாகவே இருக்கும்
வெளியேற வாய்ப்பு இல்லை
எனினும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஸ்டார்ட்-அப்கள் அல்லது செலவுகளைக் கட்டுப்படுத்த விரும்பும் நிறுவனங்கள், இந்தச் சலுகைகளை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி பெங்களூருவை விட்டு வெளியே நிறுவனத்தை அமைக்கலாம். பெங்களூரின் நெரிசல் பிடிக்காத நிறுவனங்கள் இதை ஏற்கக்கூடும். ஆனால் வேகமாக வளர விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், அவ்வளவு எளிதாக பெங்களூரை விட்டு வெளியேறாது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications