டிகே சிவக்குமார் அமைச்சரவையில் முதல் விக்கெட்.. கர்நாடகா அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மகரிஷி வால்மிகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்தில் ரூ.89 கோடி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். பாஜகவின் எதிர்ப்பு பணிந்து அவர் ராஜினாமா முடிவை எடுத்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

karnataka-minister-nagendra-decided-to-resign-due-to-valmiki-corporation-scam

கர்நாடகவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இவரது அமைச்சரவையில் நாகேந்திரா திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக உள்ளார்.

பல்லாரி மாவட்டம் கூட்லகி, பல்லாரி புறநகர் சட்டசபை தொகுதிகளில் 4 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது 4வது முறையாக பல்லாரி புறநகர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.

இந்நிலையில் தான் நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி உள்ளார். அவர் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. கர்நாடகவின் முந்தைய முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் நாகேந்திரா பழங்குடி துறையின் அமைச்சராக இருந்தார். அப்போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது பழங்குடியின துறையின் கீழ் கர்நாடகா மகரிஷி வால்மிகி பட்டியல் பழங்குடி மேம்பாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்தஆணையத்தின் அக்கவுண்ட் அதிகாரி சந்திரசேகரன் கடந்த 2024 மே மாதம் தற்கொலை செய்தார். அப்போது ஆணையத்தில் இருந்து அதிகப்படியான நிதியை மாற்று பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டதும், இதனால் ஏற்பட்ட பிரஷரால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. மொத்தம் ரூ.89 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது.

இதில் நாகேந்திராவிற்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 2024 ஜூன் மாதம் நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் ஆகஸ்ட் 3ம் தேதி டிகே சிவக்குமார் அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்றார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாகேந்திராவை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

செப்டம்பர் 1ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராய்ச்சூரில் இருந்து ப்லலாரிக்கு பாஜகவினர் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தான் நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். இதுதொடர்பாக டிகே சிவக்குமாரிடம் அவர் பேசிய நிலையில் விரைவில் ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+