ரசிகரை கொடூரமாக கொன்ற வழக்கு! விசாரணையை குழப்ப தர்ஷன் முயற்சி.. போலீஸ் குற்றச்சாட்டு
பெங்களூர்: தனது ரசிகரை கொலை செய்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும், விசாரணையில் குறுக்கீடு செய்வதற்கு அவர் தொடர்ந்து முயன்று வருகிறார் என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தவர்தான் தர்ஷன். காலம் சென்ற பழம்பெரும் நடிகரான தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகனான இவர், தனது தந்தையின் மூலம் திரை துறைக்கு அறிமுகமாகியுள்ளார். சினிமா இவர் எதிர்பார்த்ததை போல இவரை உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தீவிர முயற்சியால் தனக்கான இடத்தை தர்ஷன் தக்கவைத்துக்கொண்டார்.

தற்போது கோடிகளில் புரளும் டாப் ஹீரோக்களில் இவரும் ஒருவர். இவருக்கு கடந்த 2003ம் ஆண்டு விஜயலட்சுமி என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இப்படி இருக்கையில்தான் திரைத்துறையில் இவருக்கும் பிரபல நடிகையான பவித்ராவுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மனைவி விஜயலட்சுமியுடன் அடிக்கடி தகராறில் தர்ஷன் ஈடுபட்டிருக்கிறார்.
இப்படி இருக்கையில்தான் தர்ஷனின் தீவிர ரசிகராக ரேணுகா சுவாமி உள்ளே என்ட்ரி ஆகியுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தர்ஷனின் காதலியான பவித்ராவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். "உன்னால்தான் எங்க அண்ணன் குடும்பமே நாசமாகிடுச்சி" என்கிற தொனியில் பவித்ராவை இழிவுப்படுத்தி மெசேஜ் அனுப்பியுள்ளார். தொடர் ஆபாச மெசேஜ் தொல்லையை தாங்க முடியாத பவித்ரா இது குறித்து தர்ஷனிடம் முறையிட்டிருக்கிறார்.
இந்த கொலைக்கான தொடக்கப்புள்ளி இதுதான் என காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார். காதலி கண் கலங்குவதை பார்க்க முடியாத தர்ஷன், ரேணுகா சுவாமியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இந்த திட்டத்தில் தனது கூட்டாளிகளை இணைத்துக்கொண்ட அவர், திட்டமிட்டபடி ரேணுகா சுவாமியை கடத்தி அடித்து சித்ரவதை செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் மேலோங்க சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் நிலைகுலைந்த ரேணுகா சுவாமி உயிரிழந்திருக்கிறார்.
ரேணுகா சுவாமிக்கு சமீபத்தில் திருமணமான நிலையில், அவரது மனைவி தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த சூழலில் ரேணுகாவின் கொலை வழக்கில் காவல்துறை தர்ஷன் உட்பட சிலரை கைது செய்தது. அவர்கள் ஜூன் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த காவல் மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விசாரணையில் குறுக்கீடு செய்ய தர்ஷன் முயல்வதாக கர்நாடக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது பவித்ராதான் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து காவலை ஜூலை 22ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில் தர்ஷன் வீட்டில் போலீசார் நடத்திய ரெய்டில் ரூ.80.40 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications