Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைநழுவும் கர்நாடகா? பாஜக எடுத்த முக்கிய முடிவு.. இன்று மட்டும் 4 கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கு மே 7 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார்.

கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் 14 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்தது.

Lok Sabha Election 2024 Today PM Modi to address 4 rallies in karnataka

பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, பெங்களூர் புறநகர் உள்பட தென்கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கு தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 69.23 சதவீத ஓட்டுகள் பதிவாகியது.

இதையடுத்து 2வது கட்டமாக மே 7 ம் தேதி கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இது வடகர்நாடகாவில் உள்ள தொகுதிகளாகும். இந்த பகுதியில் பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர். ஆனாலும் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் தான் பாஜக மாஸ்டர் பிளான் போட்டுள்ளது.

அதன்படி வடகர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளிலும் வெல்லும் முனைப்பில் பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மொத்தம் 4 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இதற்காக நேற்று இரவே மோடி கர்நாடகா சென்றுவிட்டார். இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி பெலகாவி பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இந்த பெலகாவி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

அதன்பிறகு உத்தர கன்னடா லோக்சபா தொகுதிக்குட்பட்ட சிர்சி பொதுக்கூட்டத்தில் மதியம் 12 மணிக்கு பேசுகிறார். இதையடுத்த மதியம் 2 மணிக்கு தாவணகெரேவில் பேசும் பிரதமர் மோடி, மாலை 4 மணிக்கு பல்லாரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பிறகு அவர் ஓய்வெடுக்கிறார். பிறகு நாளை காலை 11 மணிக்கு பாகல்கோட்டையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

பிரதமர் மோடி ஒரே நாளில் கர்நாடகாவில் 4 பொதுக்கூட்டங்களின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால் இந்த 14 தொகுதிகளில் பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர். அதேபோல் தலித் மக்களும் கூடுதலாக உள்ளனர். ஆனாலும் கடந்த சட்டசபை தேர்தலில் இந்த பகுதிகளில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி இந்த பகுதியில் தான் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கலபுரகி தொகுதியும் உள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே தலித் மக்களின் ஓட்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு பெற்று கொடுக்க வாய்ப்புள்ளது. அதோடு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி செயல்படுத்திய பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், மகளிர் இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ்ஸாக அமையலாம். இதனால் பிரதமர் மோடியும், பாஜகவும் கர்நாடகாவின் இந்த பகுதியில் அதிக கவனம் செலுத்துகிறது.

மேலும் லோக்சபா தேர்தலில் முதலில் கர்நாடகாவில் பாஜகவின் கை ஓங்கி இருந்தது. ஆனால் கடைசியாக வந்த கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி 12 இடங்கள் வரை வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுவும் பாஜகவுக்கு பிரஷரை கொடுத்துள்ளது. ஏனென்றால் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளில் 25 இடங்களில் பாஜக வென்றது. காங்கிரஸ், ஜேடிஎஸ் தலா ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வென்றனர்.

ஆனால் இந்த முறை பாஜக, ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து களம் கண்டுள்ளது. இதனால் காங்கிரஸை அதிக இடங்களில் வெல்ல விடக்கூடாது என்ற முனைப்பில் பாஜக உள்ளது. இதன் காரணமாக தான் பிரதமர் மோடி தற்போது கர்நாடகாவில் தனது பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+