பெங்களூர் அப்பார்ட்மெண்ட்டுகளில் கன்னட மொழி கட்டாயம்.. கர்நாடகா அரசு போடும் உத்தரவு?
பெங்களூர்: பெங்களூரில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்டுகளில் கன்னட மொழியில் பேசுவது, அறிவிப்புகளை வெளியிடுவது கட்டாயம் என உத்தரவிடக்ககோரி கன்னட வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவிற்கு, கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக இருக்கும் புருசோத்தம் பிலிமாலி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

''கர்நாடகாவில் நவம்பர் 1ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்பட உள்ளது. குடியிருப்புகளில் கன்னட மொழி வெறும் பெயர் பலகை, அறிவிப்பு பலகைகளில் மட்டும் இருந்தால் போதாது. குடியிருப்புகளில் உள்ள மக்களிடம் பயன்பாட்டிலும் இருக்க வேண்டும்.
இதனால் குடியிருப்போர் நலச்சங்கங்கள் வெளியிடும் அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், பொதுவான அறிவிப்புகள் மற்றும் பிற நிர்வாகம் சார்ந்த தொடர்புகளில் கன்னட மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதனை கட்டாயமாக்க வேண்டும். இதற்காக தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
அப்பார்ட்மெண்ட்டுகளில் வசிக்கும் மக்களிடம் கன்னடம் ஒரு அங்கமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சில குடியிருப்புகளில் உள்ள பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னடம் மொழி இடம்பெற வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. இது கன்னட மொழியின் வளர்ச்சிக்கு உகந்தது இல்லை. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
