"பலாத்கார சம்பவம்.." மேகதாது பாதயாத்திரையை எதிர்த்த கர்நாடக உள்துறை அமைச்சரை விளாசிய காங். சிவகுமார்
பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் நடத்தி வரும் பாதயாத்திரைக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக அமைச்சர் அரக ஞானேந்திரா மீது காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்பதில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு உறுதியாக உள்ளது. ஆனால் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

சிவக்குமார் பாதயாத்திரை
இந்த நிலையில் மேகதாது அணையை விரைவாக கட்ட வலியுறுத்தி கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தலைமையில் 11 நாள் பாதயாத்திரை நேற்று தொடங்கியது. இந்த பாதயாத்திரையை முன்னாள் முதல்வர் சித்தராமையா, மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

பாதயாத்திரைக்கு எதிர்ப்பு
கர்நாடகாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனா பரவல் பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வீதியில் நின்று காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லுக்கட்ட விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் என்னைவிட மூத்தவர்.. முடிந்தால் தடுத்து பாருங்கள் என சவால்விடுவது நல்லது அல்ல... சிவக்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும் சிவக்குமார் உள்ளிட்டோர் மீது கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறியதாகவும் வழக்கு போடப்பட்டுள்ளது.

சிவக்குமார் விமர்சனம்
உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் இந்த கருத்தை சிவக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். கனகபுராவில் இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய சிவக்குமார், மைசூரு பெண் கூட்டு பலாத்கார விவகாரத்தில் அரக ஞானேந்திரா மன்னிப்பு கேட்ட விவகாரத்தையும் சுட்டிக்காட்டினார். 2021-ல் மைசூருவில் இளம்பெண் ஒருவர் கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அரக ஞானேந்திர, இரவு 7 மணிக்கு மேல் அந்த பெண் ஏன் அங்கு போக வேண்டும்? நினைத்த நேரத்தில் கண்டன இடத்துக்குப் போனால் நாங்கள் என்ன செய்வது? என பொறுப்பில்லாமல் பேசியிருந்தார். இதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால் அரக ஞானேந்திரா தமது கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

கொரோனா சோதனைக்கு மறுப்பு
இதனிடையே பாதயாத்திரையின் போது கொரோனா பரிசோதனைக்கு சிவக்குமார் மறுத்ததும் இப்போது சர்ச்சையாகி உள்ளது. மேலும் நாட்டில் கொரோனா என்பது எதுவும் இல்லை.. பாஜகவினர்தான் அப்படி எல்லாம் பரப்பிவிடூகின்றனர் எனவும் சிவக்குமார் கூறியிருந்தார். இதற்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications