புனித் ராஜ்குமார் மரணத்தால் பீதி.. பெங்களூரில் மருத்துவமனைகளுக்கு படையெடுத்த மக்கள்! ஏன் தெரியுமா?
பெங்களூர்: நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் 46 வயதில் மரணம் அடைந்தது இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடையே இதய நோய் தொடர்பாக பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதய பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் பல மடங்காக அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை, ராஜ்யோத்சவா தினத்தையொட்டி, பொது விடுமுறை என்றாலும், நெஞ்சுவலி, நெஞ்சில் எரியும் உணர்வு, கை வலி போன்ற பிரச்சினை இருப்பதாக அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதாக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.
"பெங்களூரில் உள்ள ஜெயதேவா அரசு மருத்துவமனையில் மட்டும் நவம்பர் 1 ஆம் தேதி மதியம் வரை 1,500 புற நோயாளிகளைப் பார்த்தோம், மேலும் மைசூரில் இந்த மருத்துவமனை கிளையில் 1,000 புற நோயாளிகள் குவிந்திருந்தனர். பொதுவாக, அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 75 கேஸ்களை பார்க்கிறோம், ஆனால் ஞாயிற்றுக்கிழமை 550 கேஸ்களை பார்த்தோம், "என்று ஜெயதேவா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சிஎன் மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.

வயதானவர்களும்
பல மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், இளைஞர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் கூட பரிசோதனை செய்ய குவிந்ததாக தெரிவித்தனர். இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி, ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் டாக்டர் பிரதீப் குமார் கூறுகையில், அவசர அறை மற்றும் OPD ஆகியவற்றில் குறைந்தது மூன்று மடங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் நெஞ்சு வலி தொடர்பான புகார்களுடன் வருகிறார்கள், மேலும் ECG, எக்கோ கார்டியோகிராம், TMT சோதனைகள் மற்றும் ட்ரோபோனின் போன்ற சோதனைகள் செய்ய வற்புறுத்துகிறார்கள். சிலர் கரோனரி CT ஆஞ்சியோகிராபி பற்றி விசாரித்தனர் பல நோயாளிகளுக்கு மனோவியல் அறிகுறிகள் மட்டுமே இருந்தது. நிஜமான உடல்நிலை பாதிப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

புனித் ராஜ்குமார்
"இருதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இல்லாத பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். புனித் ராஜ்குமார் மரணம் குறித்து தொடர்ந்து டிவியில் செய்திகளை பார்த்த பிறகு ஏற்பட்ட பீதி மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலான செய்திகளை பார்த்த பீதி காரணமாக இதுபோன்று மக்கள் மருத்துவமனைகளுக்கு படையெடுத்துள்ளனர். சிறு வலிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று மக்கள் நினைப்பது நல்ல விஷயம்தான். இவ்வாறு டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார்.

ஏற்கனவே சிரஞ்சீவி சர்ஜா இறந்தபோதும் கூட்டம்
அப்பல்லோ மருத்துவமனை இருதயநோய் நிபுணர் டாக்டர் அபிஜித் குல்கர்னி கூறுகையில், "இப்போது மட்டுமல்ல. சிரஞ்சீவி சர்ஜா, சித்தார்த் சுக்லா போன்ற இளம் வயது பிரபலங்கள் இறந்த பிறகும் இப்படி ஒரு கூட்டத்தை பார்த்தோம். புனித் ராஜ்குமார் இறந்த தினத்தன்று, இதய நோய் தொடர்பான புகார்களுடன் வந்த நோயாளிகளால் அவசரநிலை பிரிவு நிரம்பியது," என்றார்.

வருடாந்திர செக் அப்
இருப்பினும், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் இதய நோய் நிபுணரான டாக்டர் ராஜ்பால் சிங் கூறுகையில், ஒரே நாளில் மக்கள் கூட்டமாக மருத்துவமனைகளுக்கு விரைவதை விட, மக்கள் ஒரு முழுமையான வருடாந்திர பரிசோதனை செய்தால் போதும். ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், சிறந்த உடல் எடையை பராமரிக்க வேண்டும், புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார்.

உடற்பயிற்சி
"வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது ஜாகிங் போன்ற மிதமான தீவிர உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. மிகவும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் ECG/echo மற்றும் தேவைப்பட்டால், TMT டெஸ்ட் செய்து தங்களை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார், டாக்டர் பிரதீப்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications