9 நாள்.. பெங்களூர் பள்ளி விடுதியில் இருந்து மாயமான 3 மாணவிகள்.. வேளாங்கண்ணியில் தேடும் பணி தீவிரம்
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் படித்து வரும் 3 மாணவிகள் மாயமாகி 9 நாட்கள் ஆகும் நிலையில் அவர்களை போலீசார் தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரில் உள்ள புலிகேசி நகரில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தங்கும் விடுதி வசதியும் உள்ளது. இங்கும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

3 மாணவிகள் மாயம்
இந்நிலையில் தான் விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வரும் 9 ம் வகுப்பு மாணவிகள் 2 பேர், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் என 3 திடீரென்று மாயமாகி உள்ளனர். மாணவிகள் விடுதியில் தங்கி பள்ளியில் படிப்பதாக அவர்களின் பெற்றோர் நினைத்த நிலையில் தான் 3 பேரும் மாயமாகி உள்ளனர். கடந்த 6ம் தேதியில் இருந்து அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் பெற்றோர்கள் சந்தேகம் அடைந்தனர்.

அனுமதி மறுப்பு
இந்நிலையில் தான் மாணவிகள் மாயமானது பற்றி அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளி முதல்வர்ரிடம் சம்பவம் குறித்து விசாரிக்க முயன்றனர். ஆனால் பள்ளியில் காவலாளி அனுமதி அளிக்கவில்லை. பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்தார். இதனால் கோபமடைந்த அவர்கள் பள்ளி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை
இதுபற்றி அறிந்தவுடன் புலிகேசி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாணவிகள் மாயமானது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விடுதியில் போலீசார் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமாராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மாணவிகள் கையில் பேக்குடன் வெளியே செல்வது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

வேளாங்கண்ணிக்கு...
விசாரணையில் மாணவிகள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் வேளாங்கண்ணிக்கு பெங்களூர் போலீசார் விரைந்துள்ளனர். பெண் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் அடங்கிய 10 பேர் குழுவினர் வேளாங்கண்ணியில் 3 மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாருடன் மாணவிகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் அவர்களை தேடி வருகின்றனர். 9 நாட்கள் ஆகியும் மாணவிகளை கண்டுப்பிடிக்க முடியாத நிலை உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications