3,000 ஆபாச வீடியோ: நீதிபதியிடம் கதறிய தந்தை ரேவண்ணா- நாடு திரும்பாத மகன் பிரஜ்வல்- போலீஸ் ஏமாற்றம்!
பெங்களூர்: 300 பெண்களை நாசமாக்கி 3,000 ஆபாச வீடியோக்கள் எடுத்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவிடம் 18 மணி நேரம் கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்ட போது ரேவண்ணா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனிடையே நேற்று கர்நாடகா திரும்பினால் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டநிலையில் பிரஜ்வல் நாடு திரும்பவில்லை.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச வீடியோக்கள் எடுத்தார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா, தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவை தப்ப வைக்கும் முயற்சியாக பெண்ணை கடத்தி சித்ரவதை செய்ததால் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா வீட்டில் பதுங்கி இருந்த போது ரேவண்ணா சிக்கினார்.

சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரால் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இந்த விசாரணைக்கு ரேவண்ணா எந்த ஒரு வகையிலும் ஒத்துழைப்பு தரவே இல்லையாம். இதனையடுத்து ரேவண்ணாவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம் ரேவண்ணா கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். மேலும் விசாரணைக்கு ரேவண்ணா ஒத்துழைக்காததால் 4 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
இதனிடையே வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வலை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது சிறப்பு புலனாய்வுக் குழு. பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க சிபிஐக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் இருந்து துபாய் தப்பிய பிரஜ்வல் நேற்று கர்நாடகா மாநிலம் மங்களூர் வருவார்; இதனால் மங்களூர் விமான நிலையத்திலேயே பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் மங்களூர் விமான நிலையத்துக்கு பிரஜ்வல் வரவில்லை. இதனால் பெங்களூர் விமான நிலையத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரஜ்வல் நாடு திரும்பாததால் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications