Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

₹-க்கு பதில் ரூ .. ஸ்டாலின் துணிச்சலானவர் என பாராட்டி தள்ளிய கர்நாடகா ரக்ஷன வேதிகே.. முக்கிய கடிதம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக பட்ஜெட்டில் இந்திய ரூபாயை குறிக்கும் ₹ குறியீட்டுக்கு பதில் 'ரூ' என்ற தமிழ் எழுத்து பயன்படுத்தப்பட்டது. இது சர்ச்சையான நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடகா ரக்ஷன வேதிகே அமைப்பினரின் தலைவர் நாராயண கவுடா பாராட்டு தெரிவித்துள்ளார். அதோடு தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் ₹ குறியீட்டுக்கு பதில் கன்னட எழுத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

2025-26-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

mk stalin karnataka rakshana Vedike tamil nadu

முன்னதாக நேற்று பட்ஜெட்டிற்கான இலச்சினையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அதில், 'சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட', '2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, எல்லார்க்கும் எல்லாம்' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்திய ரூபாயை குறிக்கும் ₹ குறியீடு இடம்பெறவில்லை. அதற்கு பதில் ரூபாயை குறிக்கும் தமிழ் எழுத்தான ‛ரூ' என்பது இடம்பெற்றிருந்தது. இது விவாதத்தை கிளப்பியது. மும்மொழிக்கொள்கை விவகாரம் மற்றும் இந்தி திணிப்பு விவகாரம் மீண்டும்

விவாதப்பொருளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு ரூபாயை குறிக்கும் வகையிலான ₹ என்ற குறியீட்டுக்கு பதில் ரூ பயன்படுத்தியது சர்ச்சையானது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த முடிவுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கர்நாடக ரக்ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் 2 முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. 1. தமிழக அரசு ரூபாயை குறிக்கும் தேவனாகரி குறியீட்டுக்கு பதில் தமிழில் ரூபாய் என்று பயன்படுத்த தொடங்கி உள்ளது. இது தமிழர்களின் சுயமரியாதை அரசியலுக்கு சான்றாக உள்ளது. தமிழர்கள் தங்கள் மீது வேறொரு மொழி திணிக்கப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொண்டதில்லை. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கர்நாடக ரக் ஷன வேதிகே வரவேற்கிறது.

தமிழக அரசின் சுயமரியாதை முடிவை தொடர்ந்து, கர்நாடக அரசும் ரூபாய் சின்னத்தை கன்னட எழுத்தாக மாற்ற வேண்டும். இதையே கர்நாடகாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். நமது அடையாளம் கன்னட எழுத்துக்களில் தான் உள்ளது. வேறு எந்த தேவனாகரி எழுத்துக்களிலும் இல்லை. எனவே, ரூபாய்க்கு பொருத்தமான கன்னட எழுத்தை உருவாக்க வேண்டும்.

2. கர்நாடக பொது சேவை ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் கன்னடத்தில் நடத்தப்பட வேண்டும் என்று நான் சமீபத்தில் கோரியிருந்தேன். கர்நாடகாவில் கன்னடம் அலுவல் மொழியாக இருப்பதால், கர்நாடக அரசாங்கத்தில் பணியாற்ற நியமிக்கப்படும் அதிகாரிகள் கன்னடத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் கன்னட அறிவு அவர்களின் மிக முக்கியமான தகுதியாகும். எனவே, கன்னடத்தில் நடத்தப்படும் கேபிஎஸ்சி தேர்வுகள் மற்றும் கர்நாடக அரசாங்கத்தின் சேவைக்காக நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளும் கன்னடத்தில் நடத்தப்பட வேண்டும் என்று நான் கூறியிருந்தேன்.

சிறப்பு என்னவென்றால், மகாராஷ்டிரா அரசு எனது கோரிக்கையை மராத்தி மொழிக்கு பொருந்தும் வகையில் ஒரு சட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா அரசுப் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான முதற்கட்ட மற்றும் பிரதான தேர்வுகளை மராத்தியில் நடத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மராத்தி மீடியத்தில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மராத்தியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா அரசாங்கத்தை நான் பாராட்டுகிறேன். கர்நாடக அரசு உடனடியாக உரிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும், கேபிஎஸ்சி உட்பட கர்நாடக அரசின் பணிக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து தேர்வுகளையும் கன்னடத்தில் நடத்த முடிவு செய்ய வேண்டும் என்றும் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அண்டை மாநிலங்கள் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க எடுக்கும் முடிவுகளை போல் கன்னட அடையாளத்தை பாதுகாக்க நல்ல முடிவுகளை எடுக்குமாறு மாநில அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினை பாராட்டி உள்ள இந்த கர்நாடகா ரக்ஷன வேதிகே என்பது கர்நாடாவை சேர்ந்தது. இந்த அமைப்பு மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. கர்நாடகா உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் தொடர்பாக பஞ்சாயத்து வரும்போதெல்லாம் இந்த அமைப்பு நம் மாநிலத்துக்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும். பெங்களூரில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தும். தமிழக பஸ்கள் கர்நாடகாவுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவிக்கும். இப்படியான சூழலில் தான் கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா, முதல்வர் ஸ்டாலினை பாராட்டி உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+