பெங்களூரில் 7 பேரை கொன்று ஏற்காட்டிலும் உடல்கள் வீச்சு.. 17 வயது மகளுடன் தந்தை நடத்திய கொடூரம்
பெங்களூரு: ஒரே குடும்பத்தினர் 7 பேரையும் கடந்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிக்குள் இந்துசேகர் தீர்த்து கட்டியிருந்தார். முதலில் கடந்த 16-ந்தேதி தனது மனைவி சுனிதாவை அவர் கொலை செய்திருந்தார். அதன்பிறகு, மாமியார் ரூபவதியை தனது வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். இவர்கள் 2 பேரின் உடல்களையும் வீட்டில் இருந்து அகற்றிய பின்பு, மைத்துனர் சிவக்குமார், திவ்யாவை வீட்டுக்கு விருந்துக்காக அழைத்து கொன்றுள்ளார். இப்படி ஏழு பேரை கொன்ற இந்து சேகருக்கு அவரது 17வயது மகள் உடந்தையாக இருந்துள்ளார். அவர்களது உடல்களை பெங்களூரு அருகே நந்திமலை, தமிழ்நாடு சேலம் அருகே ஏற்காடு வனப்பகுதி, ஹாசன் அருகே சிராடிதோட் வனப்பகுதிகளில் வீசியதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக் பகுதியில் பாஷியம் சர்க்கிள் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள 60-வது கிராஸ் பகுதியில் 52 வயதாகும் இந்து சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுனிதாவுக்கு இந்த தம்பதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்திருந்தது. தம்பதிக்கு 17 வயதில் மகள் இருக்கிறார். இவர், கல்லூரி ஒன்றில் பி.யு.சி. (பிளஸ் 2) படித்து வருகிறார். சுனிதா ஒரு வக்கீலிடம் ஊழியராக பணியாற்றி வந்தார்.

சுனிதாவின் தாய் ரூபவதிக்கு 65 வயது ஆகிறது. சுனிதாவின் அண்ணன் சங்கருக்கு 45 வயது ஆகிறது. இவரது மனைவி நளினிக்கு 29 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு 10 வயதில் யதீன் என்ற மகன் இருக்கிறான். சுனிதாவின் தம்பி சிவக்குமாருக்கு 30 வயது ஆகிறது. இவரது மனைவி திவ்யாவுக்கும் 30 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு 7 வயதில் புனித் என்ற மகன் இருந்தான்.
சங்கர், சிவக்குமார் தங்களது மனைவி, மகனுடன் ஸ்ரீராமபுரத்திலேயே வசித்து வந்தார்கள். இதற்கிடையே நளினி, அவரது கணவர் சங்கர் ஆகியோர் திடீரென்று அடுத்தடுத்து காணாமல் போனார்கள். இதையடுத்து கடந்த 3-ந்தேதி மகள், மருமகன், பேரன் ஆகிய 3 பேரும் காணாமல் போய் விட்டதாக ஸ்ரீராமபுரம் போலீஸ் நிலையத்தில் நளினியின் தாய் துங்கம்மா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கடைசியாக சங்கரின் செல்போன் சுனிதாவின் வீட்டில் இருந்ததற்கான சிக்னல் போலீசாருக்கு தெரியவந்தது.
உடனே அங்கு சென்ற போது சுனிதாவின் வீடு பூட்டி கிடந்தது. அங்கு யாரும் இல்லை. உடனே சுனிதா, அவரது கணவர் இந்து சேகரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். மறுநாள் (4-ந்தேதி) அலசூர் பகுதியில் காரில் சுற்றிய இந்து சேகருடன் அவரது 17 வயது மகள் மற்றும் சிறுவன் யதீன் ஆகியோர் இருந்தனர். இதையடுத்து, இந்து சேகரை பிடித்து விசாரித்த போது போலீசாரின் இதயத்தையே உலுக்கும் சம்பவங்கள் தெரிய வந்தது.
இந்து சேகர், தனது மனைவி சுனிதா, மாமியார் ரூபவதி, மைத்துனர்கள் சங்கர், சிவக்குமார், சங்கரின் மனைவி நளினி, சிவக்குமாரின் மனைவி திவ்யா, திவ்யா-சிவக்குமார் தம்பதியின் மகன் புனித் ஆகிய 7 பேரையும் கொலை செய்து விட்டதாக கூறியிருக்கிறார். இதற்கு தேவையான உதவிகளை தனது மகள் செய்ததாகவும் இந்து சேகர் கூறினார். ஒரே குடும்பத்தில் 7 பேரை தீர்த்துக்கட்டி இருப்பதை அறிந்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இந்துசேகர், அவரது மகளை போலீசார் கைது செய்தார்கள். ராஜாஜிநகர் பாஷியம் சர்க்கிளில் உள்ள 3 மாடி குடியிருப்பில் 3-வது மாடியில் இந்துசேகர் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் வைத்து தான் 7 பேரை யும் தீர்த்து கட்டியதாக இந்துசேகர் கூறினார். இதையடுத்து, ராஜாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியே வந்தது.
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரை
அதாவது ஒரே குடும்பத்தினர் 7 பேரையும் கடந்த அக்டோபர் 16-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிக்குள் இந்துசேகர் கொன்றுள்ளார். முதலில் அக்டோபர் 16-ந்தேதி மனைவி சுனிதாவை இந்து சேகர் கொலை செய்திருந்தார். அதன்பிறகு, மாமியார் ரூபவதியை தனது வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். இவர்கள் 2 பேரின் உடல்களையும் வீட்டில் இருந்து அகற்றிய பின்பு, மைத்துனர் சிவக்குமார், திவ்யாவை வீட்டுக்கு விருந்துக்காக அழைந்துள்ளார.
விருந்துக்கு அழைத்து கொலை
அப்போது சிவக்குமார், திவ்யா, இவர்களது மகன் புனித்தை ஆட்டுக்கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளாராம். இவர்கள் 3 பேரின் உடல்களையும் வீட்டில் இருந்து அகற்றிய பின்பு, சங்கர், நளினி, அவரது மகன் யதீனை சுற்றுலா செல்லலாம் என இந்து சேகர் தனது வீட்டுக்கு அழைத்துள்ளாராம். அதன்படி, வந்த சங்கர், நளினியையும் அவர் தீர்த்து கட்டியுள்ளார். அவர்களது உடல்களையும் காரில் எடுத்து சென்று வனப்பகுதியில் இந்துசேகர் வீசியுள்ளார்.
8வது கொலையை தடுத்த போலீஸ்
இந்த 7 கொலைகளை செய்துவிட்டு, நளினியின் மகன் யதீனை கொலை செய்ய திட்டமிட்டு காரில் சுற்றியிருந்த போது தான் போலீசாரிடம் இந்துசேகர் சிக்கி உள்ளார். அதாவது 16-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிக்குள் தீர்த்து கட்டிவிட்டு, அவர்களது உடல்களை பெங்களூரு அருகே நந்திமலை, தமிழ்நாடு சேலம் அருகே ஏற்காடு வனப்பகுதி, ஹாசன் அருகே சிராடிதோட் வனப்பகுதிகளில் தனது கார்களில் உடல்களை எடுத்துச்சென்று இந்துசேகர் வீசி உள்ளார். 8வது கொலையை தடுத்த போலீசார், உடல்களை தேடும் பணியில் இறங்கினார்கள்.
ஏற்காடு மலையில் உடல்கள்
பெங்களூரு நந்திமலையில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுவன் புனித் உடலை மட்டும் போலீசார் மீட்டார்கள். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்துசேகரின் மனைவி, மாமியார் உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அவர்களது உடல்களை தேடி ஏற்காடு, சிராடிகாட் உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.
கொலை ஏன்
சுனிதாவின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக சுனிதாவுக்கும், இந்துசேகருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவ்வாறு மனைவியுடன் தகராறு ஏற்படும் போதெல்லாம் சுனிதாவுக்கு ஆதரவாக ரூபவதி, அவரது மகன்கள் இருந்துள்ளார்கள். அதேபோல், ரூபவதிக்கு ஸ்ரீராமபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான வீடு உள்ளது. இந்த சொத்து பிரச்சினையிலும் மனைவி, மாமியார் உள்பட 7 பேரையும் இந்துசேகர் கொடூரமாக கொலை செய்திருக்கிறாராம். இதற்கு தேவையான உதவிகளை 17 வயது மகள் செய்து கொடுத்தாராம்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சிமந்த்குமார் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொலையாளியிடம் (இந்து சேகரிடம்) விசாரித்த போது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட சொந்த விவகாரம் காரணமாக கொன்றதாக கூறினார். சொத்து பிரச்சினையா?, வேறு ஏதாவது காரணமா? என்பது பற்றி விரிவாக விசாரித்து வருகிறோம். இந்த கொலைக்கு இந்துசேகரின் மகள் உதவி செய்துள்ளார். அவரிடமும் விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பின்பு தான் மற்ற விவரங்கள் தெரியவரும். தனது மகளை இந்துசேகர் மூளைச்சலவை செய்து 7 பேர் கொலைக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றியும் விசாரிக்கிறோம்" என்றார்.
ஏன் யாருக்குமே தெரியவில்லை
7 பேர் கொலையில் பக்கத்து வீட்டினருக்கு சந்தேகம் வராமல் இருந்தது தான் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.இதுபற்றி போலீசார் கூறுகையில்,பாஷியம் சர்க்கிள் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்துசேகர் வசித்த அடுக்குமாடி வீட்டின் முதல் தளத்தில் காங்கிரஸ் பிரமுகர் மட்டும் வசிக்கிறார். அங்குள்ள வீடுகளில் வேறு யாரும் இல்லை அப்படி இருந்து 20 நாட்களில் ஒரே வீட்டில் 7 பேரையும் ஆட்டுக்கல்லால் தாக்கி கொலை செய்ததுடன், அவர்களின் உடல்களை சாக்குப்பைகளில் திணித்து காரிலேயே கொண்டு போய் வனப்பகுதிகளில் வீசியுள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் அக்கம், பக்கத்தினர் யாருக்கும் தெரியவில்லை..
கைதான இந்துசேகர் சிவக்குமார், சங்கருடன் சேர்ந்து மதுகுடித்துள்ளார். குடிபோதையில் அவர்கள் தலையில் ஆட்டுக்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்hம். மனைவி, மாமியார் உள்பட 4 பெண்கள் மற்றும் சிறுவன் தூங்கும் போது ஆட்டுக்கல்லால் தாக்கி கொலை செய்திருக்கிறார். இவ்வாறு ஆட்டுக்கல்லால் தாக்கி கொல்லும் போது இரவில் டி.வியை அதிக சத்தத்துடன் வைப்பாராம். அந்த சத்தம் காரணமாக கல்லால் தாக்கும் போது, கொலை செய்யப்பட்டவர்களின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லையாம். 7 பேரின் உடல்களையும் நள்ளிரவில் காரில் வைத்து மூட்டை கட்டி எடுத்து சென்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்,




Click it and Unblock the Notifications
