சோதீக்காதீங்கய்யா..குருநாதா இந்த தடவ புது ஐட்டத்த அனுப்பிருக்காங்க! ஆர்டர் செய்ததோ லேப்டாப்! வந்தது?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பிளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு ஒரு கல்லும் பழைய கம்ப்யூட்டரின் உதிரி பாகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நீங்கள் எந்த பொருள் வாங்க வேண்டுமானாலும் நேரடியாக கடைகளுக்கு சென்று அந்த பொருட்களை பார்த்து பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளலாம் இல்லையேல் வழக்கம்போல் வீட்டிற்கு நடையை கட்டிவிடலாம்.

இதனால் வாங்கும் பொருட்களை தரம் நமக்கு நன்கு தெரிவதோடு வியாபாரி வாடிக்கையாளர்களிடையே ஒரு நல்லுறவும் இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் நீங்கள் அலையவே தேவையில்லை. எல்லா தேவைகளுக்கும் ஆன்லைனிலேயே தீர்வு கிடைக்கிறது.

ஆன்லைன் வர்த்தகம்

ஆன்லைன் வர்த்தகம்

ஆனால் தற்போது டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மார்க்கெட்டிங் அபார வளர்ச்சியை சந்தித்துள்ளது. சாப்பிடும் பொருட்களில் இருந்து இரவு தூங்கும் வரை நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உங்கள் செல்போன்களில் இருக்கும் ஆப்கள் மூலம் ஆர்டர் செய்தால் உடனடியாக உங்கள் வீடு தேடி வரும். இதற்காகவே ப்ளிப்கார்ட், ஆமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட்

குறிப்பாக தீபாவளி புத்தாண்டு பொங்கல் உள்ளிட்ட நாட்களில் பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் உள்ளிட்ட கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ப்ளிப்கார்ட் நிறுவனம் பல கவர்ச்சி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது. அப்படி ஒருவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் ஒன்றினை ஆர்டர் செய்ய அவருக்கு வந்த பொருள்தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

 லேப்டாப் ஆர்டர்

லேப்டாப் ஆர்டர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சின்மைய ரமணா என்பவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். இதைஅடுத்து அவருக்கு பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்பட்டது. ஆசை ஆசையாக லேப்டாப்பை பார்க்க அந்த பார்சலை திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பார்சல் பெட்டிக்குள் லேப்டாப்புக்கு பதிலாக ஒரு கல்லும் பழைய கம்ப்யூட்டரின் உடைந்த உதிரி பாகங்களும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு உடனடியாக மெயில் அனுப்பி இருக்கிறார்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் ப்ளிப்கார்ட் நிறுவனத்தை திட்டி தீர்த்தனர். இதையடுத்து ரமணாவுக்கு முழு பணத்தையும் திருப்பித் தருவதாக பிளிப்கார்ட் நிறுவனம் பதில் அளித்துள்ள நிலையில் இனிமேல் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த பெண்ணுக்கு மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட வறட்டிகள் டெலிவரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+