பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட்டகாசமாக தொடங்கிய சர்வதேச விமான கண்காட்சி ... 83 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் 13-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலஹங்கா விமானப்படைத் தளத்தில் இன்று தொடங்கியுள்ளது.

Recommended Video

    2021 சர்வதேச விமான கண்காட்சி… தொடங்கி வைத்த ராஜ்நாத்சிங்!

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங் விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இந்த கண்காட்சியில் இந்தியா விமான படைக்கு 48 ஆயிரம் கோடி செலவில் 83 தேஜஸ் இலகுரக விமானங்களை வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோனாக்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    விமான கண்காட்சி தொடங்கியது

    விமான கண்காட்சி தொடங்கியது

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆண்டுதோறும் இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும். இந்த கண்டகாட்சியில் உலகளாவிய விமான நிறுவனங்கள், பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.இந்த ஆண்டுக்கான 13-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரு எலஹங்கா விமானப்படைத் தளத்தில் இன்று தொடங்கியுள்ளது.

    3 நாட்கள் நடைபெறும்

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங் விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார். வழக்கமாக இந்த கண்காட்சி 5 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இந்த வருடம் வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் 3 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் உலகளாவிய விமான நிறுவங்களான போயிங், லாஹீட் மார்ட்டின், ட்ஸால்ட் உள்ளிட்டவையும், ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்டிடிஏ நிறுவனமும் பங்கேற்கிறது.

    83 தேஜஸ் இலகுரக விமானங்களை வாங்கும் ஒப்பந்தம்

    இந்திய விமான படைக்கு சொந்தமான சாரைங் ஹெலிகாப்டர்கள், சூர்ய கிரண் விமானங்கள், டகோடா, சுகோய், ரபேல், ஸ்பிட்டர் ஜெட் உள்ளிட்ட விமானங்கள் சாசகம் நிகழ்த்துகின்றன. மேலும் இந்திய விமானப் படையின் போயிங் சினூக்ஸ், ஏச் 64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் முதல்முறையாக பங்கேற்கின்றன. இந்த நிலையில் இன்று விழா தொடங்கியதும் இந்தியா விமான படைக்கு 48 ஆயிரம் கோடி செலவில் 83 தேஜஸ் இலகுரக விமானங்களை வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோனாக்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    போர் விமானங்கள் சாகசம்

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்நாத் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. கண்காட்சி தொடங்கியதும் இந்திய விமானப்படையின் 3 மி -17 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து சாகசம் நிகழ்த்தியது. தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்தி வருகின்றன.

    English summary
    The 13th International Air Show on behalf of the Indian Defense Ministry kicked off today at the Elahanga Air Force Base in Bangalore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X