ஒதுக்குப்புறத்தில்.. பிஞ்சுகளுக்கு சரக்கை ஊற்றி.. வீடியோ எடுத்த 2 இளைஞர்கள்.. தூக்கிய போலீஸ்.. ஷாக்!
சிறுவர்களை மது அருந்த வைத்த 2 இளைஞர்கள் கைதாகி உள்ளனர்
பெங்களூர்: கறிவிருந்து நிகழ்ச்சியில் சிறுவர்களை மது குடிக்க வைத்துள்ளனர் இளைஞர்கள்.. இதையடுத்து சிறுவர்கள் போதையில் அட்டகாசம் செய்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்ட கொடுமை நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ராம்நகரா மாவட்டம் கனகாபுரா தாலுக்கா கோடஅள்ளி காவல் சரகத்திற்குட்பட்டது மரளிபுரா என்ற கிராமம்.. இங்கு நேற்று மாலை ஒரு வீட்டில் கறிவிருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது.
இந்த கறிவிருந்து நிகழ்ச்சியின்போது, அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.. அந்த வகையில், கிராமத்தை சேர்ந்த 7 முதல் 10 வயதுள்ள 7 சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

மதுபானம்
இந்த சிறுவர்களை ஒரு ஒதுக்குப்புறத்திற்கு, அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அழைத்து சென்றுள்ளனர்.. மது வழங்கி அவர்களை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்... சிறுவர்களும் மதுபானங்களை விளையாட்டாக நினைத்து அதிக அளவில் குடித்துள்ளனர்...

அட்டகாசம்
இதில் போதை தலைக்கேறிய பிறகு, சிறுவர்களில் சிலர் அப்படியே அப்படியே சாய்ந்து மயங்கி விழுந்தனர்.. ஒரு சிலர் போதையில் உளறி கொட்டினர்... மேலும் ஓரிருவர், சரக்கு நன்றாக இருக்கிறது, இன்னும் வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்தனர்.. இந்த குழந்தைகளின் உளறல்கள், அட்டகாசங்கள், போதையில் பேசிய வார்த்தைகள் எல்லாவற்றையும் இளைஞர்கள் வீடியோ எடுத்து கொண்டனர்..

கிராமம்
பிறகு அந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டனர்.. சிறுவர்கள் சரக்கடிப்பதையும், போதையில் உளறி கொட்டுவதையும் பார்த்து, பொதுமக்கள் அதிர்ந்து போயினர். இந்த வீடியோ பரபரப்பானது.. இதுகுறித்து கோடஅள்ளி போலீசாருக்கும் தெரியவந்தது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மரளிபுரா கிராமத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்...

2 பேர் கைது
இதில் சிறுவர்களுக்கு மதுபானம் வழங்கி குடிக்க வைத்த 2 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.. அவர்களை தேடி வரும் போலீசார், இதுகுறித்து தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. தென்மாநிலங்களிலேயே கர்நாடகத்தில்தான் தொற்று அதிகமாக உள்ளது.. அப்படி இருந்தும், இந்த கிராமத்தில் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் கறிவிருந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.. இந்த இளைஞர்களும் சரி, சிறுவர்களும் சரி, யாருமே மாஸ்க் போடவில்லை..!
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications