யூபிஎஸ்சியில் ‛டாப்’.. 2வது குழந்தையையும் அரசு மருத்துவமனையில் பெற்ற ஐஏஎஸ்.. முன்னுதாரணமான நந்தினி!
பெங்களூர்: அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தயங்கும் நிலையில் யூபிஎஸ்சி 2016 தேர்வில் இந்தியாவில் முதலிடம் பிடித்த கர்நாடகாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நந்தினி தனது 2வது குழந்தையையும் அரசு மருத்துவமனையில் பெற்றெடுத்து முன்னுதாரணமாக மாறியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அரசு மருத்துவமனை.. பொதுமக்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கும் வகையில் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. தாலுகா, மாவட்ட வாரியாக அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

நல்ல திறமையான டாக்டர்கள், நர்ஸ்கள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்டு வருவதோடு, அரசு சார்பில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது.
இருப்பினும் கூட அரசு மருத்துவமனை பற்றிய தவறான கண்ணோட்டம் உள்ளது. இதனால் பலரும் முக்கிய சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைக்கு பதில் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் சரியாக சிகிச்சை அளிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருப்பது தான்.
இதனை சரிசெய்ய அரசியல்வாதிகளான எம்பி, எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அரசு மருத்துவனை ஊழியர்கள் சரியாக பணி செய்வார்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஆனால் தற்போதைய சூழலில் எம்பி, எம்எல்ஏக்கள் தங்களின் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை, வெளிநாடு மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதனால் இன்று வரை அரசு மருத்துவமனை மீதான தவறான கண்ணோட்டத்தை மாற்ற முடியாத நிலை உள்ளது.
இத்தகைய சூழலில் தான் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது 2வது குழந்தையை அரசு மருத்துவமனையில் பெற்றெடுத்து அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். அந்த ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் நந்தினி. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த இவர் 2016ல் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். அதன்பிறகு கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தற்போது கர்நாடகா மாநில வணிக வரித்துறையில் கூடுதல் ஆணையராக நந்தினி செயல்பட்டு வருகிறார். இத்தகைய சூழலில் தான் அவர் கர்ப்பமாக இருந்தார்.
பெங்களூரில் வசித்து வரும் அவருக்கு கடந்த 16ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் வாணிவிலாஸ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 17 ம் தேதி நந்தினிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 3 கிலோ எடையில் பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். அதன்பிறகு 18 ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு சென்றார். இவர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல்லாரி மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் பல்லாரி அரசு மருத்துவமனையில் முதல் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்மூலம் அவரது 2 குழந்தைகளையும் அரசு மருத்துவமனையில் பெற்றெடுத்து முன்னுதாரணமாக மாறியுள்ளார்.
இதுபற்றி நந்தினி ஐஏஎஸ் கூறுகையில், ‛‛நான் பல்லாரி அரசு மருத்துவமனையில் முதல் குழந்தையையும், இப்போது வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் 2 வது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளேன். என்னை பொறுத்தமட்டில் அரசு மருத்துவமனை என்பது தனியாருக்கு நிகராகவும் சில இடங்களில் தனியார் மருத்துவமனையை விட கூடுதல் வசதிகளுடனும் இயங்கி வருகிறது.
இந்த வசதியை நாம் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் ஒரு அங்கமாக நான் இருக்கும் நிலையில் அரசு வசதியை பயன்படுத்தி கொண்டு முன்னுதாரணமாக இருக்க வேண்டியது அவசியம். அரசு அதிகாரியாக இருக்கும் என்னை போன்றவர்கள் இத்தகைய அரசு திட்டங்களை பயன்படுத்தும்போது அது இன்னும் சிறப்பாக செயல்படுத்தப்படும்'' என்றார். இந்நிலையில் தான் 2வது குழந்தையையும் அரசு மருத்துவமனையில பெற்றெடுத்த நந்தினி ஐஏஎஸ்க்கு இணையதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications