தமிழகத்திலும் பரவும் கருப்பு பூஞ்சை.. சென்னை மருத்துவமனையில் 5 பேர் அனுமதி
சென்னை: தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நோய் பாதிப்பு
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 நீரிழிவு நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கத்தால் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காது மூக்கு தொண்டை
அங்கு அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்கக் கூடியது என்பதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

கருப்பு பூஞ்சை
அது போல் சென்னையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், பூஞ்சை தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைக்கோசிஸ் நோய் ஏற்படுகிறது.

மனிதர்கள்
சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சை மூலம் இந்த கருப்பு பூஞ்சை மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது. வெட்டு, தீக்காயங்கள் மூலம் தோலில் நுழையும் இந்த பூஞ்சை தோல் மீது பரவுகிறது. கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோய், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்த கருப்பு பூஞ்சை எளிதில் பாதிக்கிறது.

மருத்துவமனை
தலைவலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பாக இருத்தல், திடீர் பார்வை குறைபாடு, சைனஸ் பிரச்சினை, மூக்கு வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கருப்பாக மாறுதல் போனஅறவை இந்த பூஞ்சை தொற்றின் அறிகுறியாகும். எனவே இது போன்ற அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications