For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகரெட் மட்டுமில்ல.. இந்த ஊர்ல மூச்சு வாங்குறதே உடம்புக்கு கெடுதல்தான்.. இந்த கொடுமையை என்னானு சொல்ல

டெல்லி காற்று மாசு பிரச்சினையை விவரிக்கும் வகையில், மூச்சு வாங்குதல் உடல் நலத்திற்கு கேடு என எழுதப்பட்ட விளம்பர புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கை

    டெல்லி: டெல்லி காற்று மாசு பிரச்சினையை விவரிக்கும் வகையிலான விளம்பர புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    தீபாவளியில் இருந்தே டெல்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளது. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, பனியுடன் சேர்ந்து பரவி வருவதால் நிலைமை மோசமாகி வருகிறது.

    breathing is injurious to health in delhi

    இதனால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. ரயில்கள் தாமதமடைவதுடன் விமானங்கள் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுவாசிக்கக் கூட முடியாத அளவுக்கு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். முகமூடி அல்லது துணியை வைத்து முகத்தை மூடிக்கொண்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களை இயக்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை.காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாசடைந்த காற்றை சுவாசிப்பது புகைப்பிடிப்பதற்கு சமம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    அட.. நம்ம நமீதாவா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே!

    டெல்லி காற்று மாசு பிரச்சினையை வைத்து பல்வேறு மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகள் இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் பகிரப்பட்ட ஒரு விளம்பர புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த புகைப்படத்தில் டெல்லி இந்தியா கேட் பின்னணியில், "எச்சரிக்கை.. சுவாசிப்பது உடல்நலத்திற்கு கேடு", என எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் 2300 லைக்ஸ் அள்ளியது.

    இதேபோல் "டெல்லி உடல் நலத்திற்கு கேடு" உள்பட ஏகப்பட்ட வாசகங்கள் அடங்கிய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. நீதிமன்றம் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் கூட டெல்லியில் காற்று மாசு குறையவில்லை என்பது தான் சோகமாக விஷயமாக உள்ளது.

    English summary
    All India congress party's instagram post on Delhi air pollution goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X