அட்சய திருதியை: ஏழுமலையான் தங்க, வெள்ளி, தாமிர டாலர்கள் வாங்க தயாரா?

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாலாஜி, பத்மாவதி உருவம் பொறித்த தங்க, வெள்ளி, தாமிர டாலர்களை திருப்பதி தேவஸ்தானம் விற்பனை செய்கிறது.

சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' என்று அழைக்கிறோம். இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை ஏப்ரல் 28, 29 தினங்களில் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட மங்கல பொருட்களை வாங்கினால் பெருகும் என்பது என்பது மக்களின் நம்பிக்கை.

நகை விற்பனை

நகை விற்பனை

மக்களின் நம்பிக்கையை வைத்து நகை வியாபாரிகள் விளம்பரங்கள் மூலம் அதிக பொன்நகைகள், வெள்ளி, பிளாட்டினம் நகைகளை விற்பனை செய்து காசு பார்ப்பார்கள்.

ஏழுமலையான் டாலர்

ஏழுமலையான் டாலர்

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பல ஆண்டுகளாக தங்க, வெள்ளி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாலரின் ஒரு பக்கத்தில் ஏழுமலையான் உருவமும், மற்றொரு பக்கத்தில் பத்மாவதி தாயார் உருவமும் பொறிக்கப்பட்டு ஆந்திரா வங்கி மூலமாக பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டாலர்கள் விற்பனை

டாலர்கள் விற்பனை

தற்போது டாலர்கள் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. தினமும் சாதாரண நாட்களில் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை விற்பனை நடக்கிறது. கோவிலில் சாதாரண விழாக்களின்போது ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை டாலர்கள் விற்பனையாகும்.

லட்சக்கணக்கான டாலர்கள்

லட்சக்கணக்கான டாலர்கள்

கடந்த ஜனவரி மாதம் நடந்த வைகுண்ட ஏகாதசி அன்று ஒரேநாளில் ரூ..13 லட்சத்துக்கு டாலர்கள் விற்பனை ஆகியது. மேலும் ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா, யுகாதி பண்டிகை ஆகிய நாட்களில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டாலர்கள் விற்பனை நடக்கும்.

தங்கம், வெள்ளி

தங்கம், வெள்ளி

இந்த நிலையில் அடுத்த வாரம் இறுதியில் அட்சய திருதியை வருவதால், டாலர்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனினும், 5 கிராம் எடையிலான தாமிர டாலர்கள் இருப்பு இல்லை. 10 கிராம் தங்க டாலர் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

விலை எவ்வளவு?

அட்சய திருதியை முன்னிட்டு தங்க, வெள்ளி, தாமிர டாலர்கள் விவரம் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 கிராம் தங்க டாலர் - ரூ.28,480

5 கிராம் தங்க டாலர் ரூ.14, 455

2 கிராம் தங்க டாலர் ரூ.5. 780 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

10 கிராம் வெள்ளி டாலர் ரூ.575

5 கிராம் வெள்ளி டாலர் ரூ.310

10 கிராம் தாமிர டாலர் ரூ.20

5 கிராம் தாமிர டாலர் ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTD has announced that gold, silver, and copper dollars will be put up for sales in the Tirupathi temple on the special occasion of Akshaya Trithiyai day.
Please Wait while comments are loading...