"பெரிய சரிவு.." தங்கம் விலை பற்றி மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்! 20% கூட குறையலாம்
சென்னை: கடந்த சில காலமாகவே தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் இப்போது தான் சற்று நிலையாக இருக்கிறது. அதேநேரம் தங்கம் விலை கொஞ்சம் குறைந்தால் நன்றாகவே இருக்கும் என்பது பொதுமக்கள் கருத்தாக இருக்கிறது. இதற்கிடையே என்ன நடந்தால் தங்கம் விலை சரிய வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை இப்போது சீராக இருக்கும் நிலையில், மக்கள் விலை குறைய வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவில் சில மாற்றங்கள் நடந்தால் தங்கம் விலையில் பெரிய சரிவு வர வாய்ப்பு இருப்பதாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் மேலும் கூறுகையில், "கெவின் வாஷ் அவர் சொன்னது போல அமெரிக்காவின் பேலன்ஸ் ஷீட்டை குறைத்தார் என்றால் பல மாற்றங்கள் நடக்கும். ஏனென்றால், 1 ட்ரில்லியனாக இருந்த பேலன்ஸ் ஷீட்டை 10 டிரில்லியன் ஆக்கிவிட்டனர்.. இவர் ஒரு இரண்டு டிரில்லியன் கட் செய்தால் கூட பங்குச்சந்தையில் பீதி கிளப்பும். பங்குச்சந்தைக்குச் சரிவு ஏற்படலாம்.
இதை அவர் செய்தால்.. காஸ்ட் ஆப் மணி ஏறும். வட்டி விகிதம் ஏறும். அப்போது தங்கத்தை வாங்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல ஷேர் மார்கெட்டிலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர் சொன்னதைச் செய்தால் முதலில் பங்குச்சந்தை தான் சரியும். இதை அவர் செய்தால் நிச்சயம் தங்கம் விலை உடையும். அதாவது கீழே போகும்.
4000 டாலர்
அவர் இதைச் செய்தால் தங்கம் விலை இறங்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அமெரிக்காவின் பேலன்ஸ் ஷீட்ட கணிசமான அளவுக்குக் குறைத்தால். தங்கம் 4500 டாலர் வரை கூடப் போக வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதற்கு முன்பே 4500 டாலருக்கு போய் இருந்தால்.. 4000 டாலர் வரை கூடப் போக வாய்ப்பு இருக்கிறது. அவர் சொன்னதைச் செய்தால் நிச்சயம் அது நடக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கெவின் வாஷ் சொன்னதைச் செய்தால் தங்கம் மட்டுமின்றி வெள்ளியும் சரியும்.
20% சரிவு
அதாவது சர்வதேச சந்தையில் நேற்றிரவு ஒரு அவுன்ஸ் தங்கம் 5090 டாலருக்கு வர்த்தகமானது. கெவின் வாஷ் சொன்னதை எல்லாம் செய்தால் இந்த ஒரு அவுன்ஸ் தங்கம் 4000 டாலர் வரை கூடப் போகலாம் என அவர் சொல்லியுள்ளார். அதாவது இங்கிருந்து 21% வரை கூட சரிய வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை 4000 டாலருக்கு தங்கம் போனால், இந்திய ரூபாய் மதிப்பும் இதே நிலையில் நீடித்தால் இந்தியாவில் ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ரூ.12,500 வரை போகும். இருப்பினும், இவை நடக்குமா என்பது கெவின் வாஷ் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்தே இருக்கும்.
என்ன நடக்கும்!
அவர் மற்றொரு வீடியோவில், "இப்போது ஏஐ பூம் காரணமாக எல்லாமே ஸ்மூத்தாக இருப்பதாகவும் இதனால் ஓரிரு வட்டி குறைப்புகள் செய்ய முடியும் என்றும் கெவின் வாஷ் சொல்கிறார். ஆனாலும், கிடைக்கும் டேட்டாவை பொறுத்தே முடிவு எடுப்பேன் என்றும் சொல்லி இருக்கிறார். டிரம்பை குஷிப்படுத்தவே அவர் இதுபோல சொல்லி இருக்கிறார். அதாவது கெவின் வாஷ் வட்டியைக் குறைப்பேன்.. அதேநேரம் புழக்கத்தில் இருக்கும் பணத்தையும் குறைப்பேன் எனச் சொல்லி இருக்கிறார். இரண்டுமே நேர் எதிரானது. அவர் சொன்னதைக் கேட்டே தங்கம் விலை இப்போது ஏறி இருக்கிறது. அது மெல்ல நிலையானதாக மாறி வருகிறது.
ஆனால், வரும் காலத்தில் கெவின் வாஷ் சொன்னது போலப் பணப் புழக்கத்தைக் குறைத்தால் டாலர் வலிமையடையும். அப்போது தங்கம் பெரியளவில் குறையும். ஆனால், டிரம்ப் இருக்கும் வரை அதைச் செய்ய மாட்டார் என மார்கெட் நம்புகிறது. குறைந்தது (அமெரிக்காவின் அடுத்த பெட் தலைவராக) தனது நியமனத்தை உறுதி செய்யும் வரை எதையும் செய்ய மாட்டார் என்றே மார்கெட் கருதுகிறது" என்றார்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications