For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 4,428 கோடி கொடுத்து வீடியோகான் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது ஏர்டெல்!

Google Oneindia Tamil News

டெல்லி: வீடியோகான் டெலிகாம் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரத்தை ரூ. 4428 கோடிக்கு வாங்கியுள்ளது பார்தி ஏர்டெல் நிறுவனம். இதன் மூலம் வீடியோகான் நிறுவனத்தின் 1800 மெகாஹர்ட்ஸ் அளவு ஸ்பெக்ட்ரமை பார்தி டெலிகாம் கையகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்தபடியாக தற்போது ஸ்பெக்ட்ரம் சேவையில் அதிக வலிமையுடன் இருக்கும் நிறுவனம் ஏர்டெல் ஆகும்.

Bharti Airtel buys Videocon Telecom for Rs 4,428 cr

இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் வீடியோகான் நிறுவன ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளது. இதன்மூலம் மேலும் கூடுதல் தரத்துடன் ஏர்டெல் நிறுவனத்தால் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவையை வழங்க இயலும்.

தற்போது பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தின் வடக்கு,மேற்கு பகுதிகள் மற்றும் குஜராத் ஆகிய 6 பகுதிகளுடைய ஸ்பெட்ரமை வீடியோகானிடமிருந்து ஏர்டெல் தன் வசப்படுத்தியுள்ளது.

தற்போது வீடியோகானை வாங்கியுள்ளதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை வட்டம் 15லிருந்து 19 ஆக உயர்ந்துள்ளது.

புதன்கிழமைதான் ஐடியா செல்லுலார் நிறுவனம், வீடியோகானுடன் போட்டிருந்த தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அது குஜராத், உத்தரப் பிரதேசம் மேற்கு ஆகிய இரு வட்டத்தை வாங்குவதாக இருந்தது. அதன் மதிப்பு ரூ. 3310 கோடியாகும்.

English summary
India's largest telecom operator (by subcriber base) Bharti Airtel has acquired Videocon Telecom for Rs 4,428 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X