For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பருப்பு வகைகள் விலை உச்சம் தொட்டது... துவரம் பருப்பு கிலோ ரூ 200!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: பருப்பு வகைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. துவரம் பருப்பு விலை கிலோ ரூ 180 முதல் 200 வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் துவரம் பருப்பு விலை ரூ 200ஐத் தாண்டிவிட்டது.

குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே கிலோவுக்கு ரூ 30 வரை பருப்பு வகைகள் விலை உயர்ந்துள்ளது. வட இந்தியாவில் ராஜ்மா எனப்படும் பெரிய அவரையின் விலை கிலோ ரூ 200 ஐத் தாண்டிவிட்டது.

Dal prices skyrocket, Tur dal costs Rs 200 per kg

90 ரூபாய்க்கும் கீழிருந்த பாசிப் பயறு விலை ரூ 132 ஆக உயர்ந்துள்ளது. மைசூர் பருப்பு விலை ரூ 96-லிருந்து 110 ஆக உயர்ந்துள்ளது.

இந்த அளவு விலை உயர்வுக்கு காரணம் பருப்பு வகைகளின் உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டதுதான் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த பத்து தினங்கள் வரை கண்காணித்து விட்டு, பருப்பு வகைகளை தேவைக்கேற்ப கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

English summary
A common north Indian staple, the arhar or tur dal has touched Rs 200 per kg in the retail market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X