போன தீபாவளிக்கு தங்கம் வாங்கியிருந்தால் ஓராண்டில் எவ்வளவு லாபம்? அப்போ அடுத்த தீபாவளிக்கு என்னவாகும்
சென்னை: தீபாவளி நாளான இன்று தங்கம் விலை சற்றே குறைந்திருந்தாலும், இந்தாண்டு தொடக்கம் முதல் அது தாறுமாறாக அதிகரித்துவிட்டது. இதனால் மிடில் கிளாஸ் மக்களால் கூட தங்கத்தை வாங்க முடியாத சூழலே இருக்கிறது. இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளில் தீபாவளி நாளில் தங்கம் விலை எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம்.
தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் கிளப்பிய சர்ச்சைகளே இதற்குப் பிரதான காரணமாகும். இந்தாண்டு தொடக்கம் முதல் மட்டும் தங்கம் விலை 50%க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரைத் தங்கம் என்பது வீடுகளின் சேமிப்பின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன.

தங்கம்
மேலும், தங்கம் மற்றும் வெள்ளி என்பது வெறும் முதலீடுகள் மட்டுமல்ல.. அவை கலாச்சார மற்றும் பாரம்பரிய ரீதியாகவும் முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாகத் தங்க நகைகள் நமது நாட்டில் பல சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கலாச்சார ரீதியாக முக்கியமானதாக இருப்பதாலே தீபாவளி போன்ற பண்டிகைகள் தங்கம் மற்றும் வெள்ளியை மக்கள் அதிகளவில் வாங்குவார்கள். இந்தாண்டு தீபாவளி நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும் கடந்த ஆண்டுகளில் தீபாவளி நாளில் தங்கம் விலை உயர்ந்துள்ளதே இதற்குச் சாட்சி!
வெற்றியின் அடையாளமாகப் பார்க்கப்படும் தீபாவளி நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தீபாவளி நாளில் வாங்கப்படும் அனைத்து செல்வங்களும் வீட்டிற்குச் செழிப்பைக் கொண்டுவரும் என்று நம்புகின்றனர். இதன் காரணமாகவே தீபாவளி நாளில் தங்கத்தை வாங்குவார்கள். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளில் தீபாவளி நாளில் தங்கம் விலை எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம்!
கடந்தாண்டு தீபாவளி
கடந்தாண்டு தீபாவளி அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தங்கம் 10 கிராம் இந்தியாவில் சராசரியாக சுமார் ரூ. 78,430க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு தீபாவளியன்று அதே 10 கிராம் 1,30,790 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஓரே ஆண்டில் தங்கம் 10 கிராம் சுமார் ரூ. 52,360 அதிகரித்துள்ளது. அதாவது கடந்தாண்டு தீபாவளியன்று ஒருவர் 10 கிராம் தங்கம் வாங்கியிருந்தால் இந்தாண்டு அதன் மதிப்பு சுமார் 66.76% உயர்ந்திருக்கும்.
10 ஆண்டுகளில் தங்கம் விலை
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2015ல் நவம்பர் 11ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தங்கம் விலையைக் கேட்டால் நீங்கள் நிச்சயம் நம்பவே மாட்டீர்கள். அவ்வளவு கம்மி ரேட்.. 10 கிராம் தங்கம் வெறும் ₹25,490 ஆக இருந்தது. இன்று நீங்கள் அதே தொகையை எடுத்துச் சென்றால் உங்களால் கிட்டத்தட்ட 2 கிராம் மட்டுமே வாங்க முடியும். அதாவது 10 ஆண்டுகளில் தங்கம் விலை 342.3% அதிகரித்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2017 தீபாவளி நாளில் கூட தங்கம் விலை 10 கிராம் ரூ.31,589ஆகவே இருந்துள்ளது. அதாவது இன்றைய 10 கிராம் தங்கம் விலையுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் குறைவாகவே இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தீபாவளியின் போது (நவம்பர் 14, 2020), தங்கத்தின் விலை ₹50,986ஆக இருந்தது. இது இப்போது தீபாவளி தங்க விலையுடன் ஒப்பிடும்போது சுமார் 130% அதிகமாகும்!
எந்தளவுக்கு உயர்வு
தீபாவளி நாள் தங்கம் விலை (10g) விலை வித்தியாசம்
11-Nov-15 25,490 -2,010
30-Oct-16 30,057 4,567
19-Oct-17 29,679 -378
7-Nov-18 31,589 1,910
27-Oct-19 38,293 6,704
14-Nov-20 50,986 12,693
4-Nov-21 47,553 -3,433
24-Oct-22 50,580 3,027
12-Nov-23 59,752 9,172
31-Oct-24 78,430 18,678
-
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications