'நோ கிட்டிங் டேஸ்..' ப்ளிப்கார்ட் அதிரடி ஆஃபர் விற்பனை ஏப். 1 முதல்!
மும்பை: ட்ரை அயர்ன்ஸ், டவல்கள், ஸ்பீக்கர்கள், ஏவியேட்டர்கள் மற்றும் பிராண்டட் பொருட்கள், உங்கள் தினசரி தேவை பொருட்கள் ஆகியவற்றை நம்ப முடியாத விலையில் நீங்கள் பெறலாம். ஆம், இது முற்றிலும் உண்மை!
இது ஜோக் அல்ல! ஏப்ரல் ஃபூல் நாள் திரும்ப வந்துள்ளது. இது ஜோக்குகளுக்கான நேரம். ஆனால், ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதியில், "No Kidding Days Sale" விற்பனையை மேற்கொள்கிறது ப்ளிப்கார்ட். நம்ப முடியாத டிஸ்கவுண்டுகளுடன் ஏகப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு.

உலகமே ஏமாளி தினமாக ஏப்ரல் 1ஐ கொண்டாடி மகிழும் நாளில், இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ப்ளிப்கார்ட், வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி கொண்டாடச் செய்கிறது.
"No Kidding Days Sale" பற்றி ஏற்கனவே, சிறு வீடியோக்கள் வாயிலாக டிஜிட்டல் பிளாட்பார்ம்களில், விளம்பரம் செய்து வருகிறது ப்ளிப்கார்ட். இந்த வீடியோக்களில் ப்ளிப்கார்ட்டின் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான kidults ஒன்றாகும். சரி, ப்ளிப்கார்ட் விற்பனையில் புதிதாக என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கக் கூடும்.
இந்த விற்பனை சிறப்பான தரமுள்ளவற்றை மட்டுமே காண்பிக்க உள்ளது. அதே நேரம் குறைந்த விலையில். ஒரு பொருளின் தரத்தை, நீங்கள் பல ஆயிரம் வாடிக்கையாளர்களின் ரிவ்யூக்களை பார்த்தும், ரேட்டிங்கை பார்த்தும் அறிந்துகொள்ளலாம். இதுதவிர ப்ளிப்கார்ட் ஸ்மார்ட் பை லேபிள்கள் புராடக்ட்டுகள் மேலே இருக்கும். ப்ளிப்கார்ட் அளிக்கும் இந்த சான்று தரத்தை உறுதி செய்ய உங்களுக்கு உதவும்.
உங்கள் நாள்காட்டியில் நோட் செய்து வைத்துக்கொள்ளவும். இவ்வருடத்தின் மிகப்பெரிய விற்பனை தொடங்க உள்ளது. 2018 ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2ம் தேதிகளில் மட்டும். அனைத்து ப்ளிப்கார்ட் பயனாளர்களுக்கும், இந்த ஆஃபர் பொருந்தும்.












Click it and Unblock the Notifications