2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.2%!
டெல்லி: 2018-19ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டம்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது 8.2 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த எட்டு காலாண்டுகளில் இதுதான் அதிகபட்ச ஜிடிபி வளர்ச்சி விகிதமாகும்.

முதல் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது 8.2 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2017-18ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 5.8 சதவீதமாக மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சியில் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதை இதை உறுதிப்படுத்தியுள்ளது. 2வது இடத்தில் உள்ள சீனா இதே காலகட்டத்தில் 6.7 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தையே கொண்டிருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சியானது 6.8 சதவீதமாக இருந்தது. அதேசமயம் இதே காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது 7.7 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் தென்படும் சாதகமான மாற்றங்களே இதற்குக் காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவின் தொழில் உற்பத்திக் குறியீடானது 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 5.2 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 1.9 சதவீதமாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications