மீண்டும் ரூ.7000ஐ தாண்டிய தங்கம் விலை.. வரும் காலத்தில் என்னவாகும்! ஆனந்த் சீனிவாசன் மேஜர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்ததில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. ஒரு கட்டத்தில் 22 கேரட் தங்கம் ரூ.7000க்கு கீழ் கூட சென்றது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தங்கம் விலை உர தொடங்கிவிட்டது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வது குறித்துப் பேசியுள்ள ஆனந்த் சீனிவாசன் வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் எப்போது முடிந்ததோ.. அப்போது முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,200 என்ற ரேஞ்சில் இருந்தது.

anand srinivasan business personal finance

தங்கம் விலை: அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றது முதலே தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. ஒரு கட்டத்தில் ரூ.7000க்கு கீழ் கூட சென்றது. கடந்த நவ. 17ம் தேதி ரூ.6935க்கு 22 கேரட் தங்கம் விற்பனையானது. தங்கம் விலை குறைந்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பலரும் ஆர்வமாகத் தங்கம் வாங்கினர்.

அதேநேரம் கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் நவ.18ம் தேதி 60 ரூபாயும் நேற்று நவ.19ம் தேதி 70 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை சென்னையில் மீண்டும் ரூ.7000ஐ தாண்டிவிட்டது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ரூ.7065க்கு விற்பனையானது. இதற்கிடையே தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "தங்கம் விலை நேற்றைய தினம் டக்கென ஏறிவிட்டது. நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7065இல் இருக்கிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7707இல் இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை மெல்ல அதிகரிக்கிறது.

அதாவது தங்கம் விலை தொடர் சரிவில் இருந்து நிலையான சூழலுக்கு வந்துவிட்டது போலவே தெரிகிறது. சர்வதேச முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் அடுத்தாண்டு தங்கம் விலை ராக்கெட்டில் ஏறும் என்கிறது. ஏனென்றால் அமெரிக்காவில் வட்டி விகிதத்தைக் கட்டாயப்படுத்திக் குறைப்பார்கள். அதேபோல மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கத் தொடங்குவார்கள். இதனால் தங்கம் விலை புதிய ரெக்கார்ட் அடிக்கும் எனச் சொல்கிறார்கள்.

வரும் காலத்தில் என்ன நடக்கும்: தங்கத்தை வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. டிரம்பிற்கு முன்பு, டிரம்பிற்கு பின் என்பது போல இப்போது தங்கம் விலை குறைவாகவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் இறங்க வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அடுத்தாண்டு கோல்ட்மேன் சாக்ஸ் சொல்வது போலத் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கிவிடும்

அமெரிக்க அரசியல்: ஒரு பக்கம் கூகுள் மீது அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். கூகுள் நிறுவனத்தை உடைக்க அந்நாட்டு அரசு முயல்கிறது. க்ரோம் செயலியைக் கூகுள் விற்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், இது நடக்குமா நடக்காது என்பது தெரியாது. ஆனால், இது தொடக்கம் தான். அதேபோல டிரம்பின் அட்டானி ஜெனரல் நியமனமும் சர்ச்சையாக இருக்கிறது.

டிரம்ப் வந்த உடன் ஏற்கனவே குழப்பம் ஆரம்பித்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. அதேநேரம் இது எங்குப் போய் முடியும் என தெரியாது" என்றார். அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்கள் சர்வதேச பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதே பொதுவாக வல்லுநர்கள் கருத்தாக இருக்கிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+