அதிபர் டிரம்ப் பேச பேச நிற்காமல் எகிறும் தங்கம் விலை.! இந்தாண்டு ரேட் குறைய வாய்ப்பு இருக்கா?
மும்பை: இந்தியாவில் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டிரம்ப் அதிபரான பிறகு சில காலம் மட்டும் குறைந்த தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை அதிகரிக்க என்ன காரணம் என்பதை விளக்கும் வல்லுநர்கள், இது வரும் காலங்களில் குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
தங்கம் விலையைப் பொறுத்தவரை கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என எளிதாகப் பிரிக்கலாம். கொரோனாவுக்கு முன்பு வரை 22 கேரட் தங்கம் விலை ரூ.4000 என்ற ரேஞ்சில் தான் இருந்தது.

தங்கம் விலை
ஆனால், கொரோனாவுக்கு பிறகு பறக்கத் தொடங்கிய தங்கத்தின் விலை அதன் பிறகு குறையவே இல்லை. தொடர்ந்து மளமளவென உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உச்சம் தொட்டு புதிய சாதனை படைத்தது. இடையில் சில காலம் குறைந்தாலும் கூட அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. டிரம்ப் அதிபரான பிறகு மேலும் வேகமாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
நேற்றைய தினம் (பிப்.13) சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ. 7,980ஆக இருந்தது. இன்றைய தினம் தங்கம் விலை மேலும் ரூ.10 உயர்ந்து 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7990க்கு விற்பனையாகிறது.சவரனுக்கு ரூ 80 உயர்ந்துள்ள நிலையில், ரூ 63,920 விற்பனையாகிறது. தங்கம் இதுபோல உச்சத்தைத் தொட இரு காரணங்களைப் பிரதானமாகக் குறிப்பிடுகிறார்கள். அது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்கா:
முதலில் அமெரிக்காவில் அதிகரிக்கும் பணவீக்கம். கடந்த ஜனவரி மாதத்திற்கான producer price index சமீபத்தில் தான் வெளியானது. அதில் கடந்த 18 மாதங்களில் இந்த ஜனவரி மாதம் தான் நுகர்வோர் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது பணவீக்கம் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்தால் அதைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காது.
டிரம்ப் செய்யும் செயல்:
பொதுவாக அமெரிக்க வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது, தங்கம் விலை குறையவே செய்யும். ஆனால், இப்போது சர்வதேச அளவில் பதற்றம் நிலவி வருகிறது. டிரம்ப் வந்த பிறகு போர் பதற்றங்கள் குறைந்துவிட்டாலும் கூட வர்த்தக பதற்றம் அதிகரித்துள்ளது. டிரம்ப் ஒவ்வொரு நாட்டின் மீதும் வரி விதித்து வருகிறார். இது சர்வதேச வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
குறிப்பாக நேற்றைய தினம் ரெசிப்ரோகல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி அமெரிக்கா மீது எந்த நாடு எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதே அளவுக்கு அமெரிக்காவும் சம்பந்தப்பட்ட நாடுகள் மீது வரி விதிக்கும் என்பதே அந்த அறிவிப்பாகும். இதன் மூலம் அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகள் மீதும் வரி விதிக்கும் நிலை உருவாகும். இது சர்வதேச அளவில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிகரிக்கலாம்:
இதுபோல டிரம்ப் பேச பேச புதிய வரி உத்தரவுகளைப் பிறப்பிக்கப் பிறப்பிக்க தங்கம் விலை அதிகரித்தே வருகிறது. இதன் காரணமாகத் தங்கம் விலை இந்தாண்டு முழுக்க அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். தங்கம் விலை குறைந்தாலும் கூட அது அதிகபட்சம் ரூ.100 அல்லது ரூ.200 தான் குறையும்.. அதேநேரம் தங்கம் விலை பெரியளவில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications