For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.19 ஆயிரத்திற்கு கீழே சரிந்தது தங்கம் விலை! சென்னையில் சவரன் ரூ.18,976க்கு விற்பனை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Gold Price Down
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 376 சரிவடைந்து ரூ.18976-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.19 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது பொதுமக்களை குஷிப்படுத்தியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென குறைந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 சரிவடைந்தது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.2,372 ஆகவும் சவரனுக்கு ரூ.18,976-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிலோ 1,435 ஆகவும், ஒரு கிராம் ரூ. 36 ஆகவும் கட்டி வெள்ளி(கிலோ) ரூ. 33,660 ஆகவும் உள்ளது. கடந்த 5 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,008 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தகது.

அதே நேரம், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியுள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ.62.25-ஆக இருந்தது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.62.03-ஆக இருந்தது.

English summary
Gold and silver prices tumbled in Chennai trade Monday after Swiss voters rejected a proposal to boost the central bank's gold holdings and as plummeting prices of crude oil acted as a further drag by sparking fears of deflation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X