For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி, பொன் வைக்குற இடத்துல பூவும் வைக்க முடியாது போல... மல்லிகை கிலோ ரூ 1200 !!!

Google Oneindia Tamil News

சென்னை: பொதுவாக வாசனை மலர்களுக்கு காற்றைத் தூய்மையாக்கும் சிறப்புக் குணம் உண்டென்பதால், சுப காரியங்கள் ஆனாலும் சரி, துக்க காரியங்கள் ஆனாலும் சரி பூக்களுக்குத் தான் முக்கியத் துவம் அளிக்கப் படுகிறது.

அந்தவகையில், கோயில்களுக்கு மாலை போடும் காலம் மற்றும் திருமணம், நிச்சயதார்த்தம் உள்பட எல்லா சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலமாதலால் பூக்களின் விலை, தங்கம் விலையைப் போன்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று சென்னையில் மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ 1200க்கு விற்கப் பட்டதாக பூக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் அருள் விசுவாசம் கூறியதாவது:-

மல்லிகைப் பூ வரத்து....

மல்லிகைப் பூ வரத்து....

சென்னை கோயம்பேடு மலர் அங்காடிக்கு திருவள்ளூர், காஞ்சீபுரம், திருத்தணி உள்பட இடங்களில் இருந்து அன்றாடம் 10 முதல் 12 மினிவேன்கள், ஆட்டோக்கள் மூலம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை மல்லிகைப்பூக்கள் வரத்து இருந்து வந்தது.

பனி விழும் மலர்வனம்....

பனி விழும் மலர்வனம்....

தற்போது பனிபொழிவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மல்லிகைப்பூவின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மலர் அங்காடிக்கு வெறும் 3 முதல் 5 ஆட்டோக்கள் மூலம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கிலோ வரை மட்டுமே மல்லிகைப்பூ வருகிறது.

விலை உயர்வு....

விலை உயர்வு....

இதன் காரணமாக மல்லிகைப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.300 முதல் ரூ400 வரை விற்பனையான மல்லிகைப்பூ, தற்போது ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ.800 வரை விலை உயர்ந்து, கடந்த 2 நாட்களாக மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000 லிருந்து ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிப்ரவரியில் குறையும்...

பிப்ரவரியில் குறையும்...

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் இன்று மல்லிகைப்பூவின் விலை மேலும் அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்திற்கு பிறகே பூக்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 சதவீத உயர்வு....

5 சதவீத உயர்வு....

மல்லிகைப்பூ மட்டுமின்றி முல்லை, ஜாதி, கனகாம்பரம், ரோஜா, செண்டுமல்லி உள்பட பூக்களின் விலையும் கிலோவுக்கு சராசரியாக 5 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற பூக்கள்....

மற்ற பூக்கள்....

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லிகை தவிர மற்ற பூக்கள் விலை நிலவரம் (கிலோவில்...) :-
முல்லை- ரூ.800, ஜாதி- ரூ.500, கனகாம்பரம்- ரூ.600, சாமந்தி- ரூ.100, ரோஜா- ரூ.100, செண்டுமல்லி- ரூ. 50.

English summary
Chennai flower market found a surprising price hike for jasmine flowers. Yesterday it reached Rs1200/ for 1 Kg. A few weeks ago the price for jasmine flowers were near Rs350/ per Kg. Then that reached Rs650 and yesterday reached Rs1200/.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X