ஹோம் லோன் இருக்கா? விரைவில் மெகா இன்ப செய்தி! 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு! செம அதிர்ஷ்டம்
சென்னை: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஹோம் லோன் எடுத்தே சொந்த வீட்டை வாங்கியிருப்பார்கள். ஆனால், அதற்கான வட்டியையே நாம் கணிசமாகக் கட்ட வேண்டி இருக்கும். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தால் இப்போது ஹோம் லோன் வட்டி குறையலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது ஹோம் லோன் எடுத்தோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
நமது நாட்டில் சொந்தமாக ஒரு வீடு என்பது சாதாரணமான விஷயம் இல்லை. பலருக்கும் அது ஒரு கனவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே நம்ம ஊரில் பலரும் வேலைக்குப் போன உடனே சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிடுவார்கள். அல்லது சில ஆண்டுகளில் வீட்டை வாங்கிவிடுவார்கள்.

ஹோம் லோன்
வேலைக்குப் போக ஆரம்பித்த உடனேயே சொந்தம் மற்றும் குடும்பத்திலும் கூட வீடு வாங்க அழுத்தம் அதிகரித்துவிடும். இதனால் வீடு வாங்கும் திட்டமே இல்லை என்றாலும் கூட வேறு வழியில்லாமல் சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அதிலும் கூட பெரும்பாலான நபர்கள் ஹோம் லோன் எடுத்தே வீட்டை வாங்குவார்கள்.
ரெப்போ விகதம்
அதுவும் கூட வட்டி விகிதம் என்பது எப்போதும் நிலையாக இருக்காது. பலரும் ஹோம் லோனை எடுக்கும் போது ரெப்போ ரேட்டை பொறுத்து வட்டி மாறும் வகையிலேயே லோன் எடுத்திருப்போம். அதன்படி ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை உயர்த்தினால் நாம் செலுத்தும் ஹோம் லோன் வட்டியும் உயரும். அதேபோல ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் நாம் திரும்பச் செலுத்த வேண்டிய ஹோம் லோன் வட்டியும் குறையும். இதனால் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை எந்தளவுக்கு வைத்திருக்கிறது என்பது உற்றுக் கவனிக்கப்படும்.
இந்தியாவில் கடந்த 2023 பிப்ரவரி முதல் 2025 பிப்ரவரி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. நிலையாக அது 6.5%ல் தான் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் தான் ரெப்போ விகிதத்தை 6%ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இப்போது மற்றொரு குட் நியூஸ் வந்திருந்தது.
முக்கியமான மாற்றம்
அதாவது 2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 3.16% ஆகக் குறைந்துள்ளது. கொரோனா பரவலுக்குப் பிறகு, பணவீக்கம் இந்தளவுக்குக் குறைவது இதுவே முதல்முறையாகும். பொதுவாகவே பணவீக்கம் குறைந்தால் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ ரேட்டை குறைக்கும். ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டம் ஜூன் மாதம் நடக்கும் நிலையில், அதில் ரெப்போ ரேட் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ ரேட் குறைந்தால் அனைத்து வங்கிகளும் தங்கள் கடன் விகிதங்களையும் குறைக்கும்.
வட்டி குறையலாம்
பணவீக்கம் குறைந்துள்ளது குறித்த செய்தியைப் பகிர்ந்த பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ், வீட்டுக் கடனுக்கான வட்டிகள் குறைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிவதாகப் பதிவிட்டுள்ளார். மேலும், வீட்டுக் கடன் எடுத்த வங்கிக்குச் சென்று சந்தைக்குத் தகுந்தபடி வட்டி விகிதத்தைக் குறைத்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ள நிலையில், இதனால் உங்கள் ஹோம் லோன் இஎம்ஐ கூட குறைய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications