ஹோம் லோனில் பல லட்சம் சேமிக்கலாம்.. இஎம்ஐ பயங்கரமா குறைய போகுது! காரணம் "அந்த" ஒரு அறிவிப்பு
டெல்லி: ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாகக் கடந்த பிப்ரவரி 7ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள், அதாவது 6.5 சதவீதத்தில் இருந்து 6.25%ஆகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் மற்ற வங்கிகளும் ஹோம் லோன் விகிதத்தை குறைக்கும் சூழலில், இதன் மூலம் வீட்டுக் கடன் எந்தளவுக்குக் குறையும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஆர்பிஐ கூட்டம் நடந்தது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

6.5 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹோம் லோன் உட்பட எல்லா கடன்களும் குறையும். எந்தளவுக்கு ஹோம் லோன் குறையும். இதன் மூலம் மக்களுக்கு எந்தளவுக்கு லாபம் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரெப்போ விகிதம் குறைப்பு:
கொரோனா பரவல் ஏற்பட்ட போது கடந்த 2020இல் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட ஆரம்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2023ல் ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக உயர்த்தப்பட்ட நிலையில், அதன் பிறகு எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அதே வட்டி விகிதத்தில் தொடர்ந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன்
எப்போதும் ரெப்போ விகிதம் மாற்றப்படும் போது வீட்டுக் கடன்கள் உட்பட அனைத்து விதமான கடன்களின் இஎம்ஐக்களும் மாற்றி அமைக்கப்படும். அதன்படி ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் போது, தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த கடன்களை வங்கிகளும் குறைக்கும். இதன் காரணமாக வீட்டுக் கடன்களைக் குறைக்கும். ஏற்கனவே ஹோம் லோன் இருப்போருக்கு இஎம்ஐ குறைவது மட்டுமின்றி, புதிதாக ஹோம் லோன் கட்டுவோருக்கும் குறைவான வட்டியில் கடன் கிடைக்கும்.
ஹோம் லோன் குறையும்:
ரிசர்வ் வங்கி இப்போது வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ள நிலையில், இதன் மூலம் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் கட்ட வேண்டிய இஎம்ஐ எந்தளவுக்குக் குறையும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இது தொடர்பாக பேங்க் பஜாரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதில் ஷெட்டி கூறுகையில், "இந்த வட்டி குறைப்பே ஹோம் லோன் வாங்கியவர்களுக்குக் குறிப்பிடத்தக்கச் சேமிப்பாக மாறும்.
எந்தளவுக்குக் குறையும்:
ஒரு உதாரணத்தை நான் சொல்கிறேன். நீங்கள் 20 ஆண்டுகளுக்கு 8.75% வீதத்தில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். மார்ச் மாதத்துடன் 12 இஎம்ஐக்களை செலுத்தியிருந்தால்.. அடுத்த ஓராண்டுக்கு உங்கள் வட்டி விகிதம் குறையும். இதன் மூலம் வட்டியில் உங்கள் ஒவ்வொரு லட்சத்திற்கும் ₹8,417 குறையும். அதாவது ரூ.20 லட்சம் ஹோம் லோன் என்றால் ரூ.1.68 லட்சம் குறையும்.
அதேபோல நீங்கள் ₹50 லட்சம் கடன் வாங்கி இருந்தால் ஆண்டுக்கு ₹4.20 லட்சம் வரை ஹோம் லோன் குறையும். நீங்கள் செலுத்த வேண்டிய தொகை கணிசமாகக் குறைகிறது. அதாவது இது கிட்டதட்ட 10 இஎம்ஐ தவணைகள் இணையானது. இது நமக்கு நல்ல ஒரு சேமிப்பாக மாறுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications