ஹோம் லோன் இருக்கா? "இந்த" விஷயத்தை செய்யலேனா வட்டி குறையாது.. பெரிய செலவாகிடும்! உடனே வங்கி ஓடுங்க
மும்பை: ரிசர்வ் வங்கி இப்போது ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ள சூழலில், பலருக்கும் கடனுக்காக வட்டி குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இதனால் பலன் கிடைக்காது. யாருக்கு அதுபோல பலன் கிடைக்காது.. ஏன் அவர்களுக்குப் பலன் கிடைக்காது.. அவர்கள் இதுபோன்ற சூழல்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த வாரம் நடந்த மத்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் இரண்டாவது முறையாகக் குறைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ரெப்கோ விகிதத்தை 0.25% குறைத்துள்ள நிலையில், இப்போது விகிதம் 6%ஆகக் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்ததால் நான் கடனுக்குச் செலுத்தும் வட்டியும் குறையுமா என்பதே பலருக்கும் எழும் கேள்வியாக இருக்கிறது.

வட்டி விகிதம் குறைப்பு
இப்போது மானிடரி பாலிசி (monetary policy) நடுநிலை என்பதிலிருந்து இணக்கமானதாக மாற்றப்படுகிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்ச்சி தரும் செய்திகள் எதுவும் இல்லை என்றால் வட்டி விகிதம் குறையவே செய்யும். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடந்த 5 ஆண்டுகளாகவே ரிசர்வ் வங்கி விகிதம் 6.5% என்று அதிகமாக இருந்த நிலையில், இது மக்களுக்கு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் குறைக்கப்படும்போது நாம் செலுத்தும் இஎம்ஐக்கள் குறையும் அதேநேரம் வங்கிகளில் நாம் டெபாசிட் செய்யும் வட்டியும் எதிர்காலத்தில் குறையும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதேநேரம் ஏற்கனவே நாம் ஏற்கனவே டெபாசிட் செய்திருக்கும் பிக்சிடு டெபாசிட் உள்ளிட்ட தொகைக்கான வட்டி குறைக்கப்படாது. வரும் காலங்களில் டெபாசிட் செய்யும் தொகைக்கு மட்டுமே வட்டி குறையும்.
யாருக்குக் கொண்டாட்டம்
நாம் வாங்கிய கடன் EBLR லோன், அதாவது external benchmark linked lending rateஆக இருந்தால் கடனுக்கான வட்டி தானாகக் குறைந்துவிடும். அதென்ன EBLR என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் கடன் வாங்கும்போதே இந்த ஆப்ஷன் குறித்து விளக்குவார்கள். அதாவது ரெப்போ வட்டி விகிதம் பொறுத்து உங்கள் கடனுக்கான வட்டியும் மாறுவதே EBLR. ரெப்போ ரேட் உயர்ந்தால் நீங்கள் செலுத்தும் வட்டி உயரும். ரெப்போ வட்டி குறைந்தால் நீங்கள் செலுத்தும் வட்டி குறையும்.
யாருக்கு வட்டி குறையாது
இதுபோல EBLR கடனாக இருந்தால் ரெப்போ ரேட் குறையும் போது உங்கள் வட்டியும் தானாகக் குறையும். அதேநேரம் பிக்சுடு ரேட் (ரெப்போ வட்டி எவ்வளவு மாறினாலும் ஒரே நிலையான வட்டி கட்டுவது) உள்ளவர்களுக்கு வட்டி தானாகக் குறைக்கப்படாது. இதுபோல பிக்சுடு ரேட்டில் நீங்கள் கடன் வாங்கி இருந்தால் நீங்கள் உங்கள் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டும். கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால், இது இலவசம் இல்லை. இதற்கு நீங்கள் குறிப்பிட்ட தொகையை பிராசஸிங் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதன் பிறகே வட்டியைக் குறைப்பது குறித்து வங்கி முடிவெடுக்கும்.
என்ன செய்ய வேண்டும்
வரும் காலத்தில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறையவே வாய்ப்பு இருக்கிறது. இதனால் உங்கள் கடன் பிக்சுடு ரேட்டில் இருந்தால் அதை EBLR லோனாக மாற்றுவது நல்லது என்கிறார்கள் வல்லுநர்கள். அப்படி EBLR லோனாக மாற்றினால் வரும் காலத்தில் ரெப்போ ரேட் குறையக் குறைய உங்கள் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.
திட்டம் இதுதான்
சரிப்பா வட்டி விகிதம் குறைச்சுட்டாங்க.. அப்போ நான் கட்டும் இஎம்ஐ தொகையும் குறையும் தானே என நீங்கள் கேட்கலாம். குறிப்பாக ஹோம் லோன் வைத்திருப்போருக்கு இந்தக் கேள்வி தான் முதலில் வரும். நிச்சயம் உங்கள் இஎம்ஐ குறையும். ஆனால், உங்கள் நிதிநிலை மோசமாக இல்லை என்றால் நீங்கள் தொடர்ந்து கட்டும் இஎம்ஐ தொகையையே கட்டுங்கள். இதுபோல கூடுதல் தொகையை நீங்கள் கட்டினால் கடன் கால அளவுக்குக் கணிசமாகக் குறையும்.
ஓர் உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் வட்டி விகிதம் 50 bps அதாவது 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டு, நீங்கள் அதே இஎம்ஐ தொகையைச் செலுத்தினால் உங்கள் கடன் காலம் சுமார் 10 மாதங்கள் வரை குறையலாம். எனவே, திட்டம் இதுவாகவே இருக்க வேண்டும். அப்போது தான் குறைந்த காலத்தில் கடனை முடிக்க முடியும்.!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாகப் பொருளாதார/ நிதி சார்ந்த ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications