2010ல் பிட்காயினில் ரூ.1000 போட்டிருந்தால்.. இன்று நீங்க 244 கோடிக்கு அதிபதி! ஆனா ஒரு செக் இருக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிட்காயின் மதிப்பு இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், பலரும் இப்போது இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். 2010ம் ஆண்டு முதல் பிட்காயின் டிரேட் செய்யப்படும் நிலையில், அப்போது நீங்கள் வெறும் ரூ. 1000ஐ முதலீடு செய்திருந்தால் நீங்கள் இன்று 244 கோடி லாபம் பார்த்து இருப்பீர்கள்.. இது கேட்க நன்றாக இருந்தாலும் இதில் சின்ன செக் இருக்கிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அப்போது அவர் தனது ஆட்சியில் பிட்காயினுக்கு முக்கியத்துவம் தரப்படும் எனக் கூறியிருந்தார்.

business bitcoin personal finance

அவர் எப்போது இதைச் சொன்னாரோ.. அப்போது முதல் பிட்காயின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இப்போது பிட்காயின் விலை ரூ. 80,16,670ஆக இருக்கிறது. இது 50, 100 காயின்களின் மதிப்பு இல்லை. ஒரே ஒரு பிட்காயினின் மதிப்பாகும்.

பிட்காயின்: இந்தளவுக்கு பிட்காயின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், நம்மில் பலருக்கும் இதில் முன்பே முதலீடு செய்து இருக்கலாமோ என்று தோன்றும்.. அப்படி முதலீடு செய்திருந்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

பிட்காயின் என்பது 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை சடோஷி நகமோட்டோ என்பவர் தொடங்கினார். அவர் யார்.. எந்த நாட்டை சேர்ந்தவர்.. ஆணா.. பெண்ணா என்று எதுவும் தெரியாது. பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் பிட்காயின் மதிப்பு இப்போது உச்சத்தில் இருந்தாலும் கூட கடந்த காலங்களிலும் இது இப்படியே இருந்துள்ளது எனச் சொல்லமுடியாது.

ஒரு ரூபாய் கூட இல்லை: பிட்காயின், அதன் ஆரம்ப நாட்களில் எந்த மதிப்பும் இல்லாத ஒரு டிஜிட்டல் நாணயமாக இருந்தது. ஆரம்பத்தில் பிட்காயினை மைன் செய்வோர் அதை வைத்துக் கொள்வார்கள். 2010ஆம் ஆண்டில் தான், பிட்காயின் முதல் முறையாக டிரேட் செய்யப்பட்டது. அப்போது அதன் மதிப்பு ஒரு ரூபாயாக கூட இல்லை. ஆனால், இப்போது 10 ஆண்களில் அது ஒரு சிறு விதை ஆலை மரமாக வளர்ந்து நிற்பது போல வளர்ந்துள்ளது.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.. 2010ம் ஆண்டு பிட்காயினில் ரூ.1,000 முதலீடு செய்திருந்தால்.. உங்களுக்கு எந்தளவுக்கு லாபம் வந்து இருக்கும்.. 2010இல் ஒரு பிட்காயின் விலை $0.08 டாலராக இருந்தது.. அப்போது ஒரு டாலர் மதிப்பு ரூ. 42ஆக இருந்தது. எனவே, ரூபாய் மதிப்பில் அது ரூ 3.38ஆக இருந்தது.

ரூ. 244 கோடி: எனவே, நீங்கள் ரூ.1,000 ரூபாயைப் போட்டு இருந்தால்.. உங்களால் 295.85 பிட்காயின்களை வாங்கியிருக்க முடியும்.. இப்போது 2024 நவ. மாதம் ஒரு பிட்காயின் சுமார் $98,000 வர்த்தகமாகி வருகிறது. இப்போது ஒரு டாலர் ரூ.84.45ஆக இருக்கிறது. அதாவது ஒரு பிட்காயின் விலை ரூ 82,76,100 ஆகும். நம்மிடம் 295.85 பிட்காயின் இருக்கும் நிலையில், அதை வைத்து கணக்குப் போட்டால் நம்மிடம் ரூ.244 கோடி ரூபாய் இருக்கும்.

அதாவது 2010இல் நீங்கள் இதில் ரூ. 1000ஐ முதலீடு செய்திருந்தால் இன்று அது ரூ. 2,447 கோடியாக இருந்து இருக்கும். அதாவது 14 ஆண்டுகளில் 24.47 பில்லியன் சதவீதம் லாபம் கிடைத்திருக்கும்.

செக் இருக்கு: இது கேட்க நன்றாக இருந்தாலும் இதில் சின்ன செக் இருக்கிறது. அதாவது மற்ற முதலீடுகளைப் போல இல்லாமல் பிட்காயின் விலை மிகப் பெரியளவில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். உதாரணமாக 2021இல் மே 1ம் தேதி ரூ.42 லட்சமாக இருந்த பிட்காயின் விலை அதே மே மாதம் 29ம் தேதி 40% சரிந்து ரூ. 25 லட்சமாகக் குறைந்தது.

விலை அதிகரிக்கும் போது என்ன தான் மகிழ்ச்சியாக இருந்தாலும் இதுபோல குறையும் போது பலரும் அஞ்சி வந்த வரை லாபம் என விற்று இருப்பார்கள். மேலும், பிட்காயின் என்பது எந்தவொரு ரெகுலேஷனுக்கு கீழும் வராது. இதனால் பிரச்சினை என்றாலும் யாரிடமும் புகார் அளிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+